Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, Feb 24, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madras High Court

இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது : பராசக்தி தயாரிப்பாளர்

Admin
Last updated: February 7, 2026 7:57 am
Admin
Share
SHARE

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

​சுதா கொங்கரா இயக்கத்தில் ரவிமோகன், சிவகார்த்திகேயன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் (DAWN Pictures) சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், கடந்த 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வு என்றும், இதுபோன்ற வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது சமூகப் போராட்டங்கள் மீது எந்த தனிநபரும் காப்புரிமையோ அல்லது தனியுரிமையோ கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம், ஆனால் கதாபாத்திரங்கள், வசனங்கள், திரைக்கதை ஆகியவை முற்றிலும் கற்பனையானவை என்றும், தனித்துவமானவை என்றும் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல், வழக்கு விசாரணையை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

TAGGED:atharvacopyrightMadras High Courtparasakthiravi mohansivakarthikeyansudha kongara
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

பாமக சின்னத்தை முடக்கக் கோரிய நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மனு தள்ளுபடி

3 Min Read
Chennai BenchMadras High Court

அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு

2 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு – வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

2 Min Read
Moot Courts & CompetitionsTN Law Colleges News

ஒரு மொழியை என் மீது திணிப்பதை என்றுமே ஏற்கமாட்டேன் – நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சூளுரை

4 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?