Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

நகராட்சி கடை ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கோரிய மனு – மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு!

Admin
Last updated: March 17, 2026 3:59 pm
Admin
Share
SHARE

பொது ஏலத்தில் இட ஒதுக்கீடு வழங்கக் கோருவது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

மனுதாரரின் கோரிக்கை

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் குழித்துறை நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கடைகளை ஒதுக்கீடு செய்யும்போது, கல்வி மற்றும் அரசுப் பணிகளில் வழங்கப்படுவதைப் போல பட்டியல் சமூகத்தினருக்கு (SC/ST) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூக நீதியின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு கடை ஒதுக்கீட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்

நீதிமன்றத்தின் கண்டனம்

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொது ஏலத்தில் இட ஒதுக்கீடு கோருவது எந்த விதத்தில் நியாயம்? சட்ட அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்தால் மட்டுமே அதனை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும் என கருத்து தெரிவித்தனர்.

எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாமல், சுயநலத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் இத்தகைய கோரிக்கைகளை ஏற்க முடியாது எனக் கூறி மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் இல்லாததால், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொது ஏலம் மற்றும் இட ஒதுக்கீடு என்றால் என்ன?

அரசு அல்லது நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்படும்போது, அவை அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் பொது ஏலமாகவே நடத்தப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடு முறையை, வணிக ரீதியிலான ஏல நடவடிக்கைகளில் கட்டாயமாக்க சட்டத்தில் தனிப்பிரிவு இல்லை. இதையே நீதிபதிகள் இந்த தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

“மனைவி சுயமாகச் செல்ல முடிவு செய்தால் நீதிமன்றம் தலையிட முடியாது” – ஆட்கொணர்வு வழக்கில் மதுரை அமர்வு அதிரடி!

2 Min Read
Chennai BenchMadras High CourtMadurai Bench

பதவியேற்றார் தலைமை நீதிபதி

1 Min Read
Madras High CourtMadurai Bench

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு: நீதிமன்றம் காலக்கெடு!

1 Min Read
Breaking Legal NewsMadurai Bench

ஆகாஷ் மரண வாக்குமூலம்: “போலீசார் காலைத் தடியால் அடித்து உடைத்தனர்” – சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஆணை!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?