Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madras High CourtSupreme Court

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மையை உறுதிசெய்ய அரசியலமைப்பு திருத்தம் வேண்டும் : திமுக எம்பி பி.வில்சன் 

Admin
Last updated: February 7, 2026 5:31 am
Admin
Share
SHARE

மத்திய அரசு வழங்கிய நீதிபதிகளின் நியமன விகிதாச்சார எண்ணிக்கை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள திமுக எம்.பி. பி.வில்சன், நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பன்முகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள திமுக எம்.பி. பி. வில்சன், ​​உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன? உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? இவற்றல் 2021 முதல் நியமிக்கப்பட்ட பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட, பெண்கள் மற்றும் சிறுபான்மை ஆகியவற்றை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பிரிவு வாரியான  எண்ணிக்கை என்ன? ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் காலியிடங்கள் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற கேள்விகளை மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரிடம் எழுப்பி இருந்தார். 

இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,  10வது சட்ட ஆணையம் தனது 95வது அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தும் வகையில், 11 வது சட்ட ஆணையம் தனது 125வது அறிக்கையை 1988 ஆம் ஆண்டு சமர்ப்பித்ததாக குறிப்பட்டுள்ளார். அதில், டெல்லியில் அரசியலமைப்பு வழக்குகளுக்கான அமர்வையும், மேல்முறையீட்டு வழக்குகளுக்கான அமர்வுகளை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய இந்தியா என 5 இடங்களில் அமைக்கலாம் என வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். 18வது சட்ட ஆணையத்தின் 229வது அறிக்கையில் அரசியலமைப்பு அமர்வை டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் டெல்லி, தெற்கில் சென்னை அல்லது ஹைதராபாத், கிழக்கில் கொல்கத்தா, மேற்கில் மும்பையில் நான்கு அமர்வுகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தாகவும் இணை அமைச்சர் பதிலில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிப்ரவரி 18, 2010 அன்று நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில், தலைநகர் டெல்லிக்கு வெளியே அதன் அமர்வுகளை அமைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று தெரிவித்ததையும், தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நிறுவுவது தொடர்பாக 2016 ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 13.07.2016 அன்றைய தீர்ப்பின்படி, அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பப்பட்டு, விசாரணையில் நிலுவையில் உள்ளதாக பதில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்வதில் எந்தவிதமான இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை என்பதால், எந்தவொரு சாதி அல்லது வகுப்பு வாரியான தரவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் சமூக பின்னணி குறித்த விவரங்கள் பெறப்பட்டதால், அதனடிப்படையில் 01.01.2021 முதல் 30.01.2026 வரை 593 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த 26 பேர், பழங்குடி இனத்தை சேர்ந்த 14 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 80 பேர், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 37 பேர் அடங்குவர் என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் செய்வதில் எந்தவிதமான இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை என்பதால், எந்தவொரு சாதி அல்லது வகுப்பு வாரியான தரவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் சமூக பின்னணி குறித்த விவரங்கள் பெறப்பட்டதால், அதனடிப்படையில் 01.01.2021 முதல் 30.01.2026 வரை 593 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த 26 பேர், பழங்குடி இனத்தை சேர்ந்த 14 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 80 பேர், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 37 பேர் அடங்குவர் என்றும், பெண்கள் மட்டும் 96 பேர் நியமிக்கப்பட்டனர் என்றும் திமுக எம்.பி. பி.வில்சனின் கெளவிகக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத்தன்மையை உறுதிபடுத்தும் நோக்கத்தில், நீதிபதி பதவிகளுக்கான முன்மொழிவுகளை அனுப்பும்போது, ​​பட்டியலினம், பழங்குடியினம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர், பெண்கள் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி பொருத்தமான பரிசீலனைகள் வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்துவருவதாகவும், அதன்படி உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மட்டுமே, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30.01.2026 நிலவரப்படி உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1122 ஆக இருப்பதாகவும், அவற்றில் 814 இடங்கள் நிறப்பப்பட்டுள்ள நிலையில், 308 இடங்கள் நிறப்பப்படாமல் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள மாநில வாரியான அட்டவணையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 75 அனுமதிக்கப்பட்ட இடங்களில், 53 இடங்கள் நிரப்பப்பட்டு, 22 இடங்கள் காலியாக இருப்பதாகவும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இந்த அட்டவணையிலிருந்து, மேகாலயா மற்றும் சிக்கிம் உயர் நீதிமன்றங்களில் காலியிடங்கள் இல்லை என்பதும், அதிகபட்சமாக ஓடிசா உயர் நீதிமன்றத்தில் 42 சதவீதமும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 40 சதவீதமும் காலியிடங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

TAGGED:discrimnationdmk mp wilsonjudges appointmentjudges vacancyMadras High Courtp wilsonsocial justiceSupreme Court
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Supreme Court

டிஜிபி-க்கு பெயரை பரிந்துரைக்காவிட்டால் கோர்டை நாடலாம் : UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 Min Read
Madras High CourtMadurai Bench

விமான நிலைய விரிவாக்கம் – மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள் வெளியேற உத்தரவு

1 Min Read
Madras High CourtMadurai Bench

மதுரை கள்ளழகர் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கான அரசாணை ரத்து – உயர் நீதிமன்ற மதுரை

3 Min Read
Madurai Bench

“சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சாதியோடு இணைத்துப் பார்ப்பதா?” – மதுரை அமர்வு வேதனை!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?