Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 10, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Supreme Court

“அறுவை சிகிச்சையைத் தீர்மானிக்கும் நீதிபதி மருத்துவரே!” – உச்ச நீதிமன்றம்

Admin
Last updated: April 9, 2026 2:02 pm
Admin
Share
SHARE

அறுவை சிகிச்சை அறையில் எந்த மாதிரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ‘நீதிபதி’யாக மருத்துவரே விளங்குகிறார் எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ஒன்றரை வயது குழந்தைக்குத் தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

ஒன்றரை வயது குழந்தை ஒன்றுக்கு, அதன் இடது பக்க விதைப்பையில் (Testis) இருந்த குறைபாட்டைச் சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அறுவை சிகிச்சையை மேற்கொண்ட குழந்தைகள் நல மருத்துவர் எஸ். பாலகோபால், விதையை அதற்கான பையில் சேர்ப்பதற்குப் பதிலாக, அந்த விதையை முழுமையாக நீக்கினார். தனது அனுமதியின்றி குழந்தையின் விதை நீக்கப்பட்டதாகக் கூறி, குழந்தையின் தந்தை அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.

சட்டப் போராட்டம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மருத்துவர் பாலகோபால் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முன்னதாகத் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர்கள் கே. ரவி அனந்தபத்மநாபன் மற்றும் டி.ஆர்.பி. சிவக்குமார் ஆகியோர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல் படிவத்தில் விதையை கீழிறக்குவது அல்லது அகற்றுவது (Orchidopexy or Orchidectomy) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த இடைச்செருகலும் இல்லை. அந்த விதையை அகற்றாவிட்டால் எதிர்காலத்தில் அதன் வீரியம் குறைந்துவிடும் என்று மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. எனவே, குழந்தையின் எதிர்கால நலன் கருதியே அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கில் எந்த சிகிச்சை நோயாளிக்கு தேவை என்பதை தீர்மானிக்கும் நீதிபதியாக மருத்துவரே விளங்குகிறார் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிமன்றத்தின் முடிவு

மருத்துவர் பாலகோபால் மீதான வழக்கை மேலும் நடத்துவது என்பது நீதிமன்ற நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு சமம் எனக் கருதிய நீதிபதிகள், பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கையும், அதை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பு, இக்கட்டான மருத்துவ சூழல்களில் மருத்துவர்கள் எடுக்கும் தொழில்முறை சார்ந்த முடிவுகளுக்கு (Professional Judgment) சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

Articles & OpinionsSupreme Court

கைது செய்யப்படுபவரின் அடிப்படை உரிமைகள்

2 Min Read
Supreme Court

பெண் SP-க்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு DGP-யின் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

2 Min Read
Landmark CasesSupreme Court

மதம் மாறினால் அந்தஸ்து ரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2 Min Read
Supreme Court

நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?