Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“அரசு ஊழியர்கள் விருப்பம்போல இடமாறுதல் கோர முடியாது!” – மதுரை நீதிமன்றம்!

Admin
Last updated: March 27, 2026 11:59 am
Admin
Share
SHARE

தோட்டக்கலைத்துறையில் பணிபுரியும் உதவி அலுவலர்களை வேளாண் துறைக்குப் பணி இடமாறுதல் செய்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. “அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கின் பின்னணி

தமிழக அரசு அண்மையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்த உதவி அலுவலர்கள், வேளாண் துறைப் பணிக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். இந்த இடமாறுதலுக்கு வழிவகுக்கும் அரசாணைகளை (Government Orders) ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட அலுவலர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

நீதியரசர் புகழேந்தியின் தெளிவான விளக்கம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, அரசின் புதிய திட்டத்தின் நோக்கத்தைத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி, “உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0” என்பது விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. முன்னதாக இரு துறை அதிகாரிகளும் தனித்தனியாக விவசாயிகளை சந்தித்து வந்தனர். தற்போது தொழில்நுட்ப உதவிகளை விரைவாக வழங்கவே இரு துறையினரும் இணைந்து செயல்படும் வகையில் இந்த இடமாறுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி அரசு ஊழியர்கள் தங்களுக்கு வசதியான அல்லது விருப்பமான இடத்தில்தான் பணியாற்றுவேன் என்பதை ஒரு உரிமையாகக் கோர முடியாது. இதே அரசாணையை எதிர்த்துத் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெளிவுப்படுத்தினார்.

அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை இணைப்பு!

தமிழக அரசு வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து ஆலோசனைகளும் கிடைக்க வழிவகை செய்கிறது. உதவி தோட்டக்கலை அதிகாரிகள், வேளாண் துறையுடன் இணைந்து பணியாற்றுவது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதே அரசின் நிலைப்பாடு. இதனைச் சட்டப்பூர்வமாக நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchMadras High CourtMadurai Bench

பதவியேற்றார் தலைமை நீதிபதி

1 Min Read
Madurai Bench

நகராட்சி கடை ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கோரிய மனு – மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு!

1 Min Read
Madurai Bench

நியோமேக்ஸ் மோசடி: ₹6,727 கோடி பறிமுதல் – நீதிமன்றம் அதிரடி!

2 Min Read
Madras High CourtMadurai Bench

மதுரை கள்ளழகர் கோவில் வளர்ச்சிப் பணிகளுக்கான அரசாணை ரத்து – உயர் நீதிமன்ற மதுரை

3 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?