Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, Feb 24, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchMadras High Court

டெண்டர் முறைகேடு வழக்கில் ஒப்புதல் கிடைத்த பின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை – தமிழக அரசு

Admin
Last updated: February 3, 2026 1:14 pm
Admin
Share
SHARE

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான 98 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக பொதுத்துறை செயலாளர், ஊழல் கண்காணிப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், விஜிலன்ஸ் கமிஷனர் மணிவாசன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழக்கு தொடர ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதமும், நினைவூட்டல் கடிதங்களும் நிலுவையில் இருப்பதாகவும், பொதுத்துறை வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், எந்த அதிகாரியையும் பாதுகாக்கவில்லை நினைக்கவில்லை என்றும், அவர்கள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

TAGGED:admk ministerdvacs p velumanispv
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

கொலை – 21 பேர் விடுதலை ரத்து – அனைவருக்கும் ஆயுள் தண்டனை : ஐகோர்ட்

2 Min Read
Madras High CourtMadurai Bench

திருப்பரங்குன்றம் : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஆட்சியர், காவல் ஆணையர்

4 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

பாமக சின்னத்தை முடக்கக் கோரிய நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மனு தள்ளுபடி

3 Min Read
Madras High CourtMadurai Bench

Deputation பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?