Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, Feb 24, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchDistrict Court UpdatesMadras High Court

காசோலை மோசடி வழக்கு – கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம்

Admin
Last updated: February 10, 2026 11:57 am
Admin
Share
SHARE

காசோலை மோசடி வழக்கில், 2 கோடியே 52 லட்சம் ரூபாயை 4 வாரத்தில் செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து அவரது மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் திரைப்படத்தை மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பட வெளியீட்டுக்காக, ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடன் பெற்றிருந்தது. கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், 5 கோடி ரூபாய்க்கான இரண்டு காசோலையை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் வழங்கியிருந்தது.

காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணம் வழங்குவதை நிறுத்தி வைக்க கூறி, மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்ததால், காசோலைக்கு பணம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர் முரளி மனோகர் மீதும் ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. மேலும் 7 கோடியே 70 லட்சம் ரூபாயை இழப்பீடாக அபிர்சந்த் நஹருக்கு வழங்கும்படி, முரளி மனோகருக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து முரளி மனோகர், கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, 2 கோடியே 52 லட்சம் ரூபாயை நான்கு வாரத்தில் முரளி மனோகர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு செலுத்தத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

TAGGED:ad bureau entertainmentcheque bounce casekochadaiiyaanMadras High Courtmedia one globalrajinikant
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

District Court Updates

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி

1 Min Read
District Court Updates

ஆபாச பேச்சு – திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை

1 Min Read
Madras High CourtSupreme Court

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மையை உறுதிசெய்ய அரசியலமைப்பு திருத்தம் வேண்டும் : திமுக எம்பி பி.வில்சன் 

4 Min Read
Madras High CourtMadurai Bench

கொடிக்கம்பம், பிளக்ஸ் போர்டு, பேனர் வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.-க்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?