Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, Feb 24, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madras High CourtMadurai Bench

மடப்புரம் அஜித்குமார் மரணம் – நெஞ்சே பதறுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

Admin
Last updated: February 5, 2026 5:20 am
Admin
Share
SHARE

சிவகங்கை மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், தமிழ்நாடு காவல்துறையினர் தாக்கியதால்தான் மரணமடைந்துள்ளார் என உறுதியாகியுள்ளது என்றும், வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரில் தனிப்படைக் காவலர்கள் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ஜூன் 28ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தனிப்படையை சேர்ந்த காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் 5 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு காவல் துறையினர் தாக்கியதால்தான் அஜீத்குமார் மரணமடைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது; வழக்கு பதியப்பட்டுள்ள டிஎஸ்பி, ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, கொலையான அஜித்குமார் மீதான புகார் உண்மையில்லை என்றும் அறிக்கை தயாராகி வருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றுமே இல்லாத விசயத்திற்காக காவல்துறையினர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ள நிலையில், புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என சிபிஐ தரப்பில் கேள்வி எழுப்பினார். மேலும், முன்விரோதம் ஏதேனும் இருந்ததா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை என்றும், டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் காவல்துறையினர் இவ்வாறு செய்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும்; ஒன்றுமே இல்லாத விசயத்திற்காக ஒருவரை காவல்துறையினர் அடித்து இவ்வாறு செய்திருப்பதை நினைத்தால் மனது பதறுகிறது; எனவே காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம் என குறிப்பிட்டு வழக்கை, பிப்ரவரி 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

TAGGED:ajithkumarmadappuram ajithkumartemple security
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

Chennai BenchMadras High Court

வருமான வரித் துறை விதித்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தள்ளுபடி

2 Min Read
Chennai BenchMadras High Court

ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

2 Min Read
Chennai BenchMadras High Court

அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு

2 Min Read
Chennai BenchMadras High Court

ரூ. 10 கோடி செலுத்த அவகாசம் கோரிய விஷால் மனு தள்ளுபடி

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?