தமிழ்நாட்டில் உள்ள ஆதீனம், மடங்களின் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நெடுங்குன்றத்திலுள்ள செங்கோல் ஆதினத்திற்கு சொந்தமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி திருத்தொண்டர் அறக்கட்டளையின் அறங்காவலர் ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளை பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர், ஆதீனங்கள், மடங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்றும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.