Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

முரசொலி நில விவகாரம் – 2 வாரங்களில் இறுதி விசாரணை – உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
Last updated: March 16, 2026 4:41 pm
Admin
Share
SHARE

பஞ்சமி நில விவகாரத்தில் தேசிய பட்டியலின ஆணையத்தின் நோட்டீசை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக நிலம் ‘பஞ்சமி நிலம்’ எனக் கூறி, 2019-ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டியலின ஆணையம் புதிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி உத்தரவிடலாம் என ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் தரப்பு வழக்கறிஞர் ராமமூர்த்தி இன்று தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார்

கடந்த 2024 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, இன்னும் 2 வாரங்களில் இந்த வழக்கில் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது.

பஞ்சமி நிலம் மற்றும் ஆணையத்தின் அதிகாரம் என்றால் என்ன?

பஞ்சமி நிலம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும். இதனை மற்றவர்கள் வாங்குவதற்கு சட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு நிலம் பஞ்சமி நிலமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது மற்றும் அதில் தேசிய பட்டியலின ஆணையத்தின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கலாம் என்பதே இந்த வழக்கின் முக்கிய சட்டப் புள்ளியாகும்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchMadras HC Judgments

CSK அணிக்கு மெகா சிக்கல்! சன் நெட்வொர்க் தொடர்ந்த ₹1 கோடி இழப்பீடு வழக்கு: ‘ஜெயிலர்-2’, ‘கூலி’ படப் பாடல்களைத் திருடியதாகப் புகார்!

3 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

ஓமந்தூரார் MLA விடுதி பராமரிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

1 Min Read
Chennai BenchMadras High Court

BNSS சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

1 Min Read
Chennai BenchMadras High Court

நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி – M.P. நவாஸ்கனிக்கு நெருக்கடி !

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?