Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Mar 29, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு!

Admin
Last updated: March 12, 2026 10:30 am
Admin
Share
SHARE

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சங்கங்களின் பதிவாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்டப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

  • தற்போதைய நிர்வாகிகள்: 2022-இல் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.
  • புதிய தீர்மானம்: 2024 செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உறுப்பினர் நம்பிராஜனின் மனு

இந்த தீர்மானத்தை எதிர்த்து சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அதில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்த தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், தேர்தல் முடியும் வரை தற்போதைய நிர்வாகக் குழு முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலை

இந்த வழக்கு நீதிபதி மரியா கிளாட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்கம் தரப்பில், “நிர்வாகிகளின் பதவிக்கால நீட்டிப்பு தொடர்பான தீர்மானத்தை சங்கங்களின் பதிவாளர் ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchMadras High Court

“ஆதாரமின்றி ஒரு சொத்தை வக்ஃப் என அறிவிக்க முடியாது” – உயர் நீதிமன்றம் அதிரடி!

2 Min Read
Chennai BenchMadras High Court

அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் டாக்டர் ராமதாஸ்

1 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

ராஜ்குமார் கடத்தலில் வீரப்பன் கூட்டாளிகள் விடுதலை சரியே : ஐகோர்ட்

2 Min Read
Chennai Bench

சிறுமியின் படிப்பு முக்கியம்: செங்கல்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னைக்கு மாற்றத் தந்தை மனு!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?