Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Apr 11, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“போஸ்டர் ஒட்டுபவர்களுக்குக் கூட அரசுப் பதவி… நுணுக்கங்கள் தெரியாத வழக்கறிஞர்கள்”: மதுரை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

Admin
Last updated: April 4, 2026 11:48 am
Admin
Share
SHARE

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதியின் அடிப்படையில் அல்லாமல், அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள நீதிபதி, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் பின்னடைவு ஏற்படுவதாக சாடியுள்ளார்.

வழக்கின் பின்னணி

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், பட்டியல் சமூகப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பி. புகழேந்தி விசாரித்தார்.

அம்பலமான குளறுபடி

வழக்கை ஆய்வு செய்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞரின் மிகப்பெரிய தவறு வெளிச்சத்திற்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு காயங்கள் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தது. வழக்கை நிரூபிக்க மிக முக்கியமான இந்த மருத்துவ அறிக்கையை (Medical Report), கீழமை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சாட்சியாகத் தாக்கல் செய்யவே இல்லை. இவ்வளவு முக்கியமான ஆதாரத்தை சமர்ப்பிக்கத் தவறியது, குற்றவாளி தப்பிப்பதற்கு வழிவகுக்கும் செயல் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதியின் காரசாரமான கருத்துக்கள்

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதியின் அடிப்படையில் நடப்பதில்லை. ஆட்சியாளர்களுடன் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்களுக்கே பதவிகள் வாரி வழங்கப்படுகின்றன என நீதிபதி காட்டமாக கருத்து தெரிவித்தார். தேர்தல் நேரங்களில் போஸ்டர் ஒட்டுபவர்களுக்குக் கூட அரசு வழக்கறிஞர் பதவிகள் வழங்கப்படுவது வேதனையளிக்கிறது. இவர்களுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரிவதில்லை. பதவிக்கு வந்த பிறகாவது தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள இவர்கள் முயற்சிப்பதில்லை. இவர்களால் பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார். தவறு செய்த வழக்கறிஞர் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவர் பதவி நீக்கமும் செய்யப்படவில்லை என நீதிபதி சாடினார்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அவருக்குப் போதிய சட்ட அறிவு இருக்கிறதா? என்பது குறித்து 4 வாரங்களில் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். அதே சமயம், மனுதாரர் ராஜ்குமார் மீதான குற்றச்சாட்டுகள் மிகத் தீவிரமானவை என்பதால், அவரது தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர்களின் கடமை என்ன?

அரசு வழக்கறிஞர்கள் (Public Prosecutors) என்பவர் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள். அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கும்போது, குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்கும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்கவே, ‘திறமையான வழக்கறிஞர்களைப் பாரபட்சமின்றி நியமிக்க வேண்டும்’ என நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

“மனைவி சுயமாகச் செல்ல முடிவு செய்தால் நீதிமன்றம் தலையிட முடியாது” – ஆட்கொணர்வு வழக்கில் மதுரை அமர்வு அதிரடி!

2 Min Read
Madurai Bench

“தண்டனை வழங்குவது நீதித்துறையின் வேலை!” – காவல்துறைக்கு அதிகாரம் வழங்கிய அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை!

2 Min Read
Madras High CourtMadurai Bench

அரசு நிலங்களை பாதுகாப்பதில் மெத்தனம்: ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

2 Min Read
Madurai Bench

“அமைதியான போராட்டத்திற்குத் தடை இல்லை!” – 65 பேர் மீதான வழக்கு ரத்து!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?