Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

மாணவி சோபியா கைது: மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
Last updated: March 13, 2026 8:03 am
Admin
Share
SHARE

ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினருக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஒழுங்கு நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி

2018-ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த விமானத்தில், “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என லூயிஸ் சோபியா கோஷமிட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். இதனை எதிர்த்து அவரது தந்தை மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

மனித உரிமை ஆணையத்தின் முந்தைய உத்தரவு

இந்த புகாரை விசாரித்த ஆணையம், சோபியாவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்து, பாதிக்கப்பட்ட சோபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த தொகையை சம்பந்தப்பட்ட போலீசாரிடமே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், 0சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

மனித உரிமை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்துப் போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் ஷமீம் அஹமது அடங்கிய அமர்வு, ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் எடுக்கும் உடனடி முடிவுகளை குறை கூற முடியாது.

விசாரணை நடக்கும் முன்பே மனித உரிமை ஆணையம் இணையாக ஒரு விசாரணையை நடத்தி முன்முடிவுக்கு வர முடியாது எனவும், மனித உரிமை ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், சோபியாவுக்கு இழப்பீடு வழங்கவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் பிறப்பிக்கப்பட்ட மனித உரிமை ஆணையத்தின் 2022-ஆம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது

காவல்துறையின் அதிகாரம் என்றால் என்ன?

பொது இடங்களில் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் போது அல்லது ஒரு புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது, காவல்துறையினர் எடுக்கும் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை மூலமே உறுதி செய்ய முடியும். அந்த நடைமுறை முடிவதற்கு முன்பே மனித உரிமை மீறல் என முத்திரை குத்த முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு விளக்குகிறது.

TAGGED:bjpjudgementMadras High Court
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

பட்டா நிலத்தில் அம்பேத்கர் சிலை – 3 வாரத்தில் முடிவெடுக்க வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read
Chennai BenchMadras High Court

கலைமகள் சபா நில ஏலம்: கால அட்டவணையை வெளியிட்டது நீதிமன்றம்!

1 Min Read
Chennai BenchMadras High Court

நடிகர் விஷாலுக்கு டைம் கொடுக்கலாமா? – லைகா கருத்தை கேட்கிறது உயர் நீதிமன்றம்

2 Min Read
Madras High CourtMadurai Bench

பொது நல வழக்கு தொடர்ந்த கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதை எதிர்த்து மனைவி வழக்கு

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?