Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Apr 11, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
District Court Updates

“இல்லாத காய்கறித் தொழிலைக் காட்டி மோசடி” – 18 ஆண்டுகளுக்குப் பின் 4 பேருக்குச் சிறை தண்டனை!

Admin
Last updated: April 1, 2026 11:49 am
Admin
Share
SHARE

அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில், தொடர்புடைய நான்கு பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2008-ஆம் ஆண்டு மயிலாப்பூரை சேர்ந்த எம். கல்பனா (29) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. காப்பீடு (Insurance) தொடர்பான கொடுக்கல் வாங்கல் மூலம் கல்பனாவுக்கு அறிமுகமானவர்கள், காய்கறி வியாபாரத்தில் முதலீடு செய்தால் கைநிறைய லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலரிடம் பெரும் தொகையை வசூலித்த பிறகு, அவர்கள் கூறிய காய்கறி வியாபாரமே உண்மையில் இல்லை (Non-existent) என்பது தெரியவந்தது.

சிபிசிஐடி விசாரணை மற்றும் தாமதம்

மோசடியின் அளவு பெரிதாக இருந்ததால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து 2009-ஆம் ஆண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இழுத்தடித்தது மற்றும் பல்வேறு சட்ட நடைமுறைகளால் இந்த வழக்கு 18 ஆண்டுகளாக நீண்டது.

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட சதித் திட்டம் (120B) மற்றும் ஏமாற்றுதல் (420) ஆகிய குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதாக கூறி ஆர். அனுராதா (திருச்சி), ஏ. முகமது அலி ஜின்னா (ஊரப்பாக்கம்), எம். முஸ்தபா (மதுரவாயல்), கே. ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

District Court Updates

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு! – 2020 முதல் 2026 வரை நீதிக்கான நீண்ட பயணம்!

3 Min Read
District Court Updates

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி

1 Min Read
District Court Updates

அவனியாபுரம் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: 9 பேர் குற்றவாளிகள்! கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2 Min Read
Chennai BenchDistrict Court UpdatesMadras High Court

காசோலை மோசடி வழக்கு – கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம்

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?