Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Apr 11, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“யானைமலை அடிவாரக் கால்வாய்களை 9 மாதங்களில் சீரமைக்க வேண்டும்!” – ஒத்தக்கடை கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
Last updated: March 30, 2026 1:11 pm
Admin
Share
SHARE

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜகம்பீரம் கண்மாய் மற்றும் அதன் நீர்வரத்து கால்வாய்களைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரம் கண்மாய் முறையான பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. கண்மாயின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, இதனால் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதி சுருங்கிவிட்டது. குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீர் நேரடியாகக் கண்மாயில் கலப்பதால் நீர் அசுத்தமடைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் வழங்கிய உத்தரவுகள்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி நீர்நிலைகளைப் பாதுகாப்பது ஒரு சமூகக் கடமை என்பதை வலியுறுத்தினர். யானைமலை அடிவாரத்தில் இருந்து ராஜகம்பீரம் கண்மாய்க்கு வரும் பழைய நீர்வரத்து கால்வாய்களை அடுத்த 9 மாதங்களுக்குள் முழுமையாக சீரமைக்க வேண்டும். கண்மாய் மற்றும் கால்வாய் பகுதிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். கண்மாயில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கண்மாயை அசுத்தப்படுத்துவோர் மற்றும் கழிவுநீரை வெளியேற்றுவோருக்கு எதிராகக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏன் இந்தத் தீர்ப்பு முக்கியமானது?

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான யானைமலையை சுற்றியுள்ள நீர்நிலைகள், அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக விளங்குகின்றன. பழைய கால்வாய்களை சீரமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர் கண்மாய்க்கு வந்து சேரும். கழிவுநீர் கலப்பதை தடுப்பதன் மூலம் அந்தப் பகுதியின் சுகாதாரமும், பல்லுயிர் பெருக்கமும் பாதுகாக்கப்படும்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

₹76 லட்சம் மோசடி வழக்கு: அமைச்சர் PTR-ன் முன்னாள் உதவியாளர் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

1 Min Read
Madurai Bench

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

1 Min Read
Madurai Bench

முன்னாள் VAO மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை – பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!

1 Min Read
Madurai Bench

பாஜக பிரமுகர் மீதான வழக்கு ரத்து: “சத்தமாகப் பேசுவது வன்முறை ஆகாது” – உயர் நீதிமன்றம் விளக்கம்!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?