Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Subscribe
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, Feb 24, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchMadras High Court

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

Admin
Last updated: February 4, 2026 5:34 am
Admin
Share
SHARE

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் ரூ.46.30 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடம், விவசாய நிலம் எனவும், அதனை வகை மாற்றம் செய்யாமல் பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குமரேசன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், பேருந்து நிலையம் கட்ட உள்ள விவசாய நிலம், 2025ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தகவலை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூன் மாதமே நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் மனுதாரர் தரப்பில் கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வகைமாற்றம் குறித்த உத்தரவு அல்ல எனவும், பேருந்து நிலையம் கட்டுவதற்கான தடையில்லா சான்று குறித்த உத்தரவு என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வகைமாற்றம் செய்வது தொடர்பான உத்தரவை மறைத்து, வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேபோல, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மீறி, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, மனுதாரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.

TAGGED:judgementkallakurichikallakurichi bus standMadras High Court
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe

Popular Posts

டாப்சி நடித்த படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை

Admin
1 Min Read

புதிய லேப்டாப் கொடுக்க ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவு

Admin
1 Min Read

“PS2 இசைக்கோர்வைக்கான அங்கீகாரம் என் விருப்பம்”

Admin
2 Min Read

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

Admin
1 Min Read

You Might Also Like

Moot Courts & CompetitionsTN Law Colleges News

ஒரு மொழியை என் மீது திணிப்பதை என்றுமே ஏற்கமாட்டேன் – நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சூளுரை

4 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

கொலை – 21 பேர் விடுதலை ரத்து – அனைவருக்கும் ஆயுள் தண்டனை : ஐகோர்ட்

2 Min Read
Madras High CourtMadurai Bench

திருப்பரங்குன்றம் : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஆட்சியர், காவல் ஆணையர்

4 Min Read
Chennai BenchMadras High Court

VB-G RAM JI சட்டப் பிரிவுகளை எதிர்த்து வழக்கு

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?