Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Monday, Jun 15, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Admin
Last updated: June 15, 2026 4:26 pm
Admin
Share
SHARE

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காவல் துறையினரின் காவலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஆகாஷ் என்பவரின் உடல் விவகாரத்தில், அவரது பெற்றோர் இன்று மாலை 5 மணிக்குள் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Contents
  • வழக்கின் பின்னணி
  • நீதிபதியின் அதிரடி உத்தரவு

வழக்கின் பின்னணி

மானாமதுரை காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஆகாஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

  • உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
  • ஆகாஷின் மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, விசாரணை அதிகாரி விரைவாக விசாரணையை முடித்து, சட்டப்படி உரிய நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதியின் அதிரடி உத்தரவு

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி விக்டோரியா கௌரி

“மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், உயிரிழந்த ஆகாஷின் உடலை இன்னும் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஒரு மனிதரின் உடலுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.”

என்று தெரிவித்தார். மேலும், “ஆகாஷின் பெற்றோர் இன்று மாலை 5 மணிக்குள் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்கள் உடலைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், காவல்துறையே உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி நாளைக்கு (ஜூன் 16) ஒத்திவைத்துள்ளார்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலப் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Admin
1 Min Read

மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ அராஜகம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு – ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 17-க்கு ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

“கால்நடை விற்பனையாளர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” – தமிழக அரசு மற்றும் தேனி எஸ்.பி.க்கு மதுரை அமர்வு உத்தரவு!

2 Min Read
Madurai Bench

“மனைவி சுயமாகச் செல்ல முடிவு செய்தால் நீதிமன்றம் தலையிட முடியாது” – ஆட்கொணர்வு வழக்கில் மதுரை அமர்வு அதிரடி!

2 Min Read
Madurai Bench

“சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்டந்தோறும் தனி அதிகாரி”: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 Min Read
Madurai BenchUncategorized

நிர்வாக ஒதுக்கீடு சட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?