காவல்துறையினர் தாக்கியதில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பொய் புகார் அளித்த நிகிதா நேரில் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவல்துறையினரால் தாக்கப்பட்டதில் மரணமடைந்தது தொடர்பான கொலை வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நான்கு தனிப்படை காவல் துறையினர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, செய்யாத குற்றத்திற்காக ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளனர் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என கூறி, நகை காணாமல் போனதாக பொய் புகார் அளிக்கப்பட்டதாக கூறும் சிபிஐ, புகார் அளித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதா என கேட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அஜித்குமார் கொலைவழக்கில் புகார் வசக்க்கில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து, அதில் மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இதனையேற்ற நீதிமன்றம், மார்ச் 4ஆம் தேதி நிகிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்