Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Wednesday, May 27, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் : ஐகோர்ட்

Admin
Last updated: February 16, 2026 9:28 am
Admin
Share
SHARE

கொலை வழக்கில் 9 பேர் விடுதலை செய்த மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவான்மியூரை சேர்ந்த ஏழுமலை என்பவர் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து, 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

தீர்ப்பை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு, கொலையை நேரில் பார்த்த எழுமலையின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வாக்குமூலங்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் உள்ளன. சிறிய முரண்பாடுகளை காரணம் காட்டி, திட்டமிட்டு கொலை செய்த சட்டவிரோத கும்பலை விடுவிக்க முடியாது என்று கூறி, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 9 பேரை குற்றவாளிகளாக அறிவித்த உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகியிருந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சந்துரு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

மீதமுள்ள சரவணன், அப்பு, குருமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த இரு பெண்கள் உள்பட ஏழு பேரும், நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து கேட்ட போது, தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

TAGGED:judgementlife sentenceMadras High Court
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchMadras HC Judgments

CSK அணிக்கு மெகா சிக்கல்! சன் நெட்வொர்க் தொடர்ந்த ₹1 கோடி இழப்பீடு வழக்கு: ‘ஜெயிலர்-2’, ‘கூலி’ படப் பாடல்களைத் திருடியதாகப் புகார்!

3 Min Read
Chennai BenchMadras High CourtMadurai BenchSupreme Court

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை

1 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

கசானா ஜூவல்லரி வருமான வரி விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2 Min Read
Madurai Bench

“உலகப்போர் முடியும் வரை போராட்டமா?” – நீதிமன்ற நேரத்தை வீணடித்தவருக்கு ₹50,000 அபராதம்! மதுரை உயர் நீதிமன்றத்தின் ‘செக்’!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?