Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
High Court JudgmentsMadras HC JudgmentsMadras High CourtMadurai Bench

“மதத்தை துறந்தால் தான் மதம் இல்லை சாதி இல்லை சான்று கோர முடியும்”

Admin
Last updated: February 26, 2026 3:40 pm
Admin
Share
SHARE

மதத்தை துறக்காமல், ஒருவர் தனக்கு “சாதி இல்லை – மதம் இல்லை” என சான்றிதழ் வழங்கும்படி கேட்கமுடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த செல்லமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு “சாதி இல்லை- மதம் இல்லை” என சான்றிதழ் வழங்கக் கோரி அளித்த மனுவை, திருப்பத்தூர் வட்டாட்சியர் நிராகரித்துவிட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தனது பெற்றோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், தனக்கு சாதி இல்லை – மதம் இல்லை என சான்றிதழ் வழங்கக் கோரியதாகவும், ஆனால் அதற்கான அரசு உத்தரவு இல்லை என கூறி, தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், “சாதி இல்லை – மதம் இல்லை” என சான்றிதழ் வழங்குவதற்கு எந்த அரசாணையும் இல்லாத நிலையிலேயே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால், அது சரியானதே என்றும், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரரின் பெற்றோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மனுதாரரும் இந்து மதத்தை சேர்ந்தவராகவே இருக்கின்ற நிலையில், மனுதாரர் தனது இந்து மதத்தை முறையாக துறக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். 

தனது மதத்தை முறையாக துறக்காத வரை அவர் சான்றிதழ் கேட்கும் கோரிக்கையை பரிசீலிக்க இயலாது என்பதால், சாதி இல்லை – மதம் இல்லை என சான்றிதழ் வழங்கும் கேள்வியை எழாது என்றும் உத்தரவிட்டுள்ளார். அதோடு மதத்தை துறந்ததாக மனுதாரர் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்பதால், சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் மதத்தை துறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றும், அவ்வாறு தேவையான விண்ணப்பம் மற்றும் ஆதாரங்களுடன் மனுத்தாக்கல் செய்தால் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் அதனை பரிசீலிக்கலாம் என்றும்,  விதிமுறைகள் இல்லையெனில் புதிதாக விதிகளை உருவாக்கி பரிசீலிக்கலாம் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

TAGGED:judgementkrj judgementMadras High Courtmaduraimadurai benchmhc_mduno religion no caste
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

“தூக்கு தண்டனையை உறுதி செய்ய சிபிஐ மனு” – சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கும் நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!

2 Min Read
Madras High CourtMadurai BenchUncategorized

புது மண்டபம் சீரமைப்புப் பணி – அவகாசம் நீட்டிப்பு!

1 Min Read
High Court Judgments

கிரேட் நிக்கோபார் திட்டம்: மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்தது கல்கத்தா உயர் நீதிமன்றம்!

2 Min Read
Chennai BenchMadras High Court

நடிகர் விஷாலுக்கு டைம் கொடுக்கலாமா? – லைகா கருத்தை கேட்கிறது உயர் நீதிமன்றம்

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?