Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

பழங்குடியினர் நிலங்களை பிறர் வாங்குவது செல்லாது – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Admin
Last updated: March 2, 2026 9:12 am
Admin
Share
SHARE

பழங்குடியின மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களை, பழங்குடியினர் அல்லாத மற்றவர்கள் விலைக்கு வாங்குவது சட்டப்படி செல்லாது என்றும், அத்தகைய நிலங்களை அரசு மீண்டும் கையகப்படுத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் பழங்குடியினரிடமிருந்து சுமார் 32 ஏக்கர் பட்டா நிலங்களை வினோதன் கந்தையா என்பவர் உள்ளிட்ட சிலர் விலைக்கு வாங்கியிருந்தனர். இந்த நிலங்களுக்குத் தடையற்ற அதிகாரம் கோரி அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரணை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி, பிப்ரவரி 13, 2026 அன்று விசாரித்து தீர்ப்பு வழங்கினார். பழங்குடியின மக்கள் தங்களின் அறியாமை மற்றும் வறுமை காரணமாக சுரண்டப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு சிறப்பு சட்டப் பாதுகாப்பு அவசியம் எனவும், வருவாய்த் துறை நிலை ஆணை BSO 15.40-ன் படி, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அந்த சமூகத்தை சேராதவர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி செல்லாது எனவும் தெரிவித்தனர்.

தகுந்த அரசு அதிகாரியின் முன் அனுமதி இன்றி நிலங்களை மாற்றவோ அல்லது விற்கவோ முடியாது. அவ்வாறு விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட நிலங்களை எவ்வித இழப்பீடும் இன்றி அரசு மீண்டும் கையகப்படுத்தலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த நிலங்கள் மீது பழங்குடியினர் அல்லாதவர்கள் சட்டப்பூர்வமான உரிமையோ அல்லது நீண்ட கால ஆக்கிரமிப்பின் அடிப்படையில் உரிமையோ கோர முடியாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உறுதிபட தெரிவித்தனர்.

மனுதாரர்கள் நிலத்தின் மீது முறையான சட்டப்பூர்வ உரிமையைப் பெறவில்லை என்பதால், அவர்களின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பானது, தமிழகம் முழுவதும் பழங்குடியின நிலங்களை ஆக்கிரமித்துள்ள அல்லது வாங்கியுள்ள நபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

TAGGED:judgementMadras High Court
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு: மே 12-ல் நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read
Chennai Bench

“மாற்றுத்திறனாளிகள் மீதான தாக்குதல் மிகத் தீவிரமானது!” – சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

2 Min Read
Chennai Bench

மதுராந்தகம் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: பொது நல வழக்காகத் தாக்கல் செய்தால் விசாரணை – உயர் நீதிமன்றம் அனுமதி!

1 Min Read
High Court JudgmentsMadras HC Judgments

H.ராஜா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?