Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Jul 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Uncategorized

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! “உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே வழக்கு முடியும்” – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!

Admin
Last updated: March 3, 2026 5:18 am
Admin
Share
SHARE

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று மிக முக்கியமான மற்றும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால், திருக்கார்த்திகை நாளான டிசம்பர் 3-ஆம் தேதி அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 4-ஆம் தேதி இரவு மனுதாரர் உட்பட 10 பேர் மலைக்கு சென்று தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தும், கோவில் நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்தத் தொடர் அலட்சியத்தை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் சார்பில் மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கார்த்திகைத் தீபத்தன்று உத்தரவை நிறைவேற்ற முயன்றபோது இந்து முன்னணி அமைப்புகளுக்கும், மாற்று மதத்தினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை காரணமாகவுமே உத்தரவை நிறைவேற்ற முடியாமல் போனது” என்று வாதிட்டு, வழக்கை முடித்து வைக்கக் கோரினார்.

இருப்பினும், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வாதத்தை முழுமையாக ஏற்கவில்லை. “இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் தான் தீபத்தை ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலப் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Admin
1 Min Read

மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ அராஜகம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு – ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Admin
1 Min Read

You Might Also Like

Chennai BenchMadras High CourtUncategorized

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

2 Min Read
Uncategorized

விஷம் வைத்துப் பொதுமக்களைக் கொல்லச் சதி: டாக்டர் உட்பட 3 ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை!

2 Min Read
Uncategorized

பிசிசிஐ-க்குச் சாதகமான வரலாற்றுத் தீர்ப்பு: “RTI சட்டத்தின் கீழ் வரம்பிற்குள் வராது” – ஒன்றிய தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் அதிரடி உத்தரவு!

3 Min Read
Madurai BenchUncategorized

நிர்வாக ஒதுக்கீடு சட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?