Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Mar 28, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchMadras HC Judgments

CSK அணிக்கு மெகா சிக்கல்! சன் நெட்வொர்க் தொடர்ந்த ₹1 கோடி இழப்பீடு வழக்கு: ‘ஜெயிலர்-2’, ‘கூலி’ படப் பாடல்களைத் திருடியதாகப் புகார்!

Admin
Last updated: March 13, 2026 10:47 am
Admin
Share
SHARE

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஒரு மிகப்பெரிய சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’, ‘ஜெயிலர்-2’ மற்றும் ‘கூலி’ ஆகிய படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகச் சன் நெட்வொர்க் (Sun TV Network Limited) நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது..

வழக்கின் பின்னணி

கடந்த மார்ச் 1, 2026 அன்று, சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் ஐபிஎல் 2026-க்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில், குறிப்பாக எம்.எஸ். தோனி தோன்றும் காட்சிகளில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘ஜெயிலர்-2’ மற்றும் ‘கூலி’ படங்களின் பின்னணி இசை (BGM) மற்றும் வசனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

சன் நெட்வொர்க் குற்றச்சாட்டுகள்

சன் நெட்வொர்க் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 44 பக்க மனுவில் கீழ்க்கண்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன

  • அனுமதியின்றிப் பயன்பாடு: அனிருத் இசையமைப்பில் உருவான ‘கூலி’ படத்தின் ‘Harbour Gang’, ‘Deva’s Entry’ மற்றும் ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘Hukum Reloaded’ போன்ற இசைக்கோப்புகளைச் சிஎஸ்கே எவ்வித அனுமதியுமின்றிப் பயன்படுத்தியுள்ளது.
  • வணிக நோக்கம்: இந்த வீடியோ வெறும் விளம்பரம் மட்டுமல்லாமல், ₹2,399-க்கு விற்கப்படும் சிஎஸ்கே ஜெர்சிகளின் விற்பனையை அதிகரிக்கவும், எட்டிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways), ஃபெடெக்ஸ் (FedEx) போன்ற ஸ்பான்சர்களின் லாபத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • அலட்சியமான பதில்: இது குறித்து சன் டிவி தரப்பு மார்ச் 1-ம் தேதியே மின்னஞ்சல் மூலம் ஆட்சேபனை தெரிவித்தும், சிஎஸ்கே அதிகாரிகள் காசி விஸ்வநாதன் மற்றும் அவினாஷ் ஸ்ரீதரன் ஆகியோர் அலட்சியமாகப் பதிலளித்ததோடு, சட்ட நோட்டீஸிற்கும் பதிலளிக்கவில்லை.

யார் மீது வழக்கு?

இந்த வழக்கில் சிஎஸ்கே நிறுவனம் (CSK) மட்டுமல்லாமல், அதன் சிஇஓ காசி விஸ்வநாதன், நிதித் துறைத் தலைவர் அவினாஷ் ஸ்ரீதரன் மற்றும் உள்ளடக்கப் பிரிவுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சீனிவாசன் ஆகியோர் தனிப்பட்ட முறையிலும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற விசாரணை – சிஎஸ்கே-வின் வாதம்

இன்று(மார்ச்.13.2026) நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎஸ்கே தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன் முன்வைத்த முக்கிய வாதங்கள்

  • வீடியோ நீக்கம்: சன் டிவி தரப்பிலிருந்து ஆட்சேபனை வந்த உடனேயே, அந்த பாடல்களை பயன்படுத்துவதை நிறுத்த நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கப்பட்டுவிட்டது.
  • 3 ஆண்டு கால வழக்கம்: “கடந்த 3 ஆண்டுகளாக எங்களது வீடியோக்களில் இதுபோன்ற பாடல்களின் சிறு பகுதிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு முன்பு சன் டிவி தரப்பு இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” என்று சிஎஸ்கே வாதிட்டது.
  • நன்றியறிதல் (Courtesy): அந்தப் பாடல்களைப் பயன்படுத்தும் போதெல்லாம், சன் நெட்வொர்க் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு முறையாக ‘Courtesy’ வழங்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சிஎஸ்கே-வின் இந்த வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, இதனை ஒரு முறைப்படியான பிரமாணப் பத்திரமாக (Affidavit) வரும் திங்கள்கிழமை (மார்ச் 16, 2026) தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். சன் டிவி கோரியுள்ள ₹1 கோடி இழப்பீடு மற்றும் வீடியோக்கள் மூலம் கிடைத்த விளம்பர வருவாய் கணக்கு குறித்த விவாதங்கள் அடுத்த விசாரணையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப்புரிமை சட்டம்!

காப்புரிமை சட்டம் 1957-ன் படி, ஒரு தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் படைப்புகளை மற்றவர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தும் போது உரிய அனுமதி பெற்று ராயல்டி வழங்க வேண்டும். சிஎஸ்கே அணி இதனை மீறியுள்ளதாக சன் நெட்வொர்க் வாதிடுகிறது.

TAGGED:cskdhonijailerjudgementkoolieMadras High Courtmsdmsdhoninetworkpicturessunsuntvwhistlepodu
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Admin
2 Min Read

கோயில் நிதியில் ₹162 கோடி பணிகள் – ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

தான செட்டில்மென்ட் ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டா? – முழு விளக்கம்!

Admin
2 Min Read

“சமூக ஒழுக்கம் வேறு, சட்டம் வேறு!” – திருமணமான ஆண் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

BSNL வழக்கில் தயாநிதி மாறனுக்கு ‘திருப்பம்’: முன்னாள் மத்திய செயலாளரைச் சாட்சியாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

2 Min Read
Chennai Bench

நவாஸ் கனிக்கு எதிரான தேர்தல் வழக்கு: வாபஸ் பெறுகிறார் ஓ. பன்னீர்செல்வம்!

2 Min Read
Chennai BenchMadras HC Judgments

கூட்டுறவு துறை பணி நியமனம்: காலக்கெடு விதித்த உயர் நீதிமன்றம்!

2 Min Read
Madras High Court

வங்கதேசத்தை சேர்ந்த 28 பேரை சொந்த நாட்டுக்கு அனுப்ப உத்தரவு

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?