Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Apr 11, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“அரசியல் உள்நோக்கம் கொண்ட புகார்?” – தவெக வேட்பாளர் பிரகாசத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன்!

Admin
Last updated: April 3, 2026 3:13 pm
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பூந்தமல்லி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் ஆர். பிரகாசம் (எ) குட்டி மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி (தனி) தொகுதிக்கு ஆர். பிரகாசம் அறிவிக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவர், பிரகாசம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். கடந்த ஜூன் 2024-ல் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, பிரகாசம் தன்னிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரைத் தொடர்ந்து திருவள்ளூர் நகரப் போலீசார் பிரகாசம் மீது ஆபாசமாகப் பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்

இதனை எதிர்த்து பிரகாசம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்சிப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில், மாற்று அரசியல் கட்சியினரின் (திமுக) தூண்டுதலின் பேரில் இந்தத் திட்டமிட்ட சதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கை, என வாதிடப்பட்டது.

பெண் நிர்வாகி அளித்த புகாரில் பாலியல் ரீதியான தீவிரக் குற்றச்சாட்டுகள் உள்ளன. தலைமறைவாக உள்ள இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது,” என அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரகாசம் குறிப்பிட்ட நாட்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் மற்றும் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது எனகூறி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் மூலம் காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்ய முடியாது என்பதால், அவர் தனது தேர்தல் பணிகளைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

பாமக சின்னம் தொடர்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

1 Min Read
Chennai Bench

“மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை!” – மீன்பிடி ஏலத்திற்கான புதிய அரசாணைக்கு உயர் நீதிமன்றம் தடை!

2 Min Read
Chennai Bench

பாமக உள்கட்சி மோதல் உச்சகட்டம்: ராமதாஸின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அன்புமணி மற்றும் வடிவேல் ராவணன் மனு!

2 Min Read
Chennai BenchMadras HC Judgments

CSK அணிக்கு மெகா சிக்கல்! சன் நெட்வொர்க் தொடர்ந்த ₹1 கோடி இழப்பீடு வழக்கு: ‘ஜெயிலர்-2’, ‘கூலி’ படப் பாடல்களைத் திருடியதாகப் புகார்!

3 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?