Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Saturday, Apr 11, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“20 நாட்களுக்காக நிரந்தரக் கட்டிடம் சாத்தியமா?” – தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக திமுக முறையீடு!

Admin
Last updated: April 7, 2026 12:34 pm
Admin
Share
SHARE

தேர்தல் காலங்களில் திறக்கப்படும் தற்காலிக கட்சி அலுவலகங்களை நிரந்தர கட்டிடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைக்கு எதிராக அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

வழக்கின் பின்னணி

  • கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் இளங்கோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் இந்த முறையீடு செய்யப்பட்டது.
  • தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு வார்டு அல்லது கிராம மட்டத்திலும் கட்சி அலுவலகங்களை நிரந்தர கட்டிடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
  • தேர்தல் பணிகளுக்காக வெறும் 15 முதல் 20 நாட்களுக்கு மட்டுமே இந்த அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக புதிய நிரந்தர கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பதோ அல்லது அமைப்பதோ கடினம்.
  • தேர்தல் ஆணையத்தின் இந்த விதியால் தேர்தல் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, தற்காலிகக் கொட்டகைகள் அல்லது பந்தல்களில் அலுவலகங்கள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுளது.

தலைமை நீதிபதி அமர்வின் பதில்

    தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த முறையீட்டைப் பரிசீலித்து இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது வாய்மொழியாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விரிவான மனுவாகத் தாக்கல் செய்யுங்கள். மனுத் தாக்கல் செய்யப்பட்டால், அதனை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என உறுதி அளித்தனர்.

    தேர்தல் களத்தில் இதன் தாக்கம் - விளக்கம்

    பொதுவாக தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் தெருமுனைகளிலும், காலி இடங்களிலும் தற்காலிகப் பந்தல்கள் அமைத்துக் கட்சி அலுவலகங்களை நடத்துவது வழக்கம். தேர்தல் ஆணையம் பாதுகாப்பு மற்றும் விதிமுறை காரணங்களுக்காக நிரந்தரக் கட்டிடங்களை வலியுறுத்தினால், அது அனைத்துக் கட்சிகளுக்கும், குறிப்பாகப் பெரிய அளவில் கிளைகளைக் கொண்ட கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும். நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தப் பழக்கவழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

    Share This Article
    Facebook Copy Link Print
    What do you think?
    Love0
    Sad0
    Happy0
    Sleepy0
    Angry0
    Dead0
    Wink0
    Leave a Comment

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Let's Connect

    304.9KLike
    3MFollow
    844.9MFollow
    40.5MSubscribe
    125Follow

    Popular Posts

    தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    Admin
    2 Min Read

    மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Admin
    2 Min Read

    கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

    Admin
    1 Min Read

    “144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

    Admin
    2 Min Read

    You Might Also Like

    Chennai Bench

    யூடியூபர் சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: நாளை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு!

    2 Min Read
    Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

    அரசுப்பணி ராஜினாமா – ஓய்வூதியம்  பெறத் தகுதியில்லை : முழு அமர்வு தீர்ப்பு

    1 Min Read
    Chennai Bench

    “18 கோடி ரூபாய் முடக்கம்: வருமான வரித்துறை மேல்முறையீட்டைத் தடுக்க முடியாது!” – வி.எஸ்.ஜெ. தினகரன் மனுத் தள்ளுபடி!

    2 Min Read
    Chennai Bench

    “மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA பரிசோதனை!” – சீல் வைக்கப்பட்ட கவரில் முடிவுகள் சமர்ப்பிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்புத் தகவல்!

    2 Min Read

    About Us

    Legal Times

    Social Networks

    Facebook-f Twitter Youtube Instagram

    C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

    Advertise With Us
    Contact Us
    Welcome Back!

    Sign in to your account

    Username or Email Address
    Password

    Lost your password?