Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Jul 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதா? – 21-ம் நூற்றாண்டில் இது ஏற்க முடியாதது!” – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
Last updated: April 8, 2026 11:43 am
Admin
Share
SHARE

கட்டப்பஞ்சாயத்து மூலம் ஒரு குடும்பத்தைப் புறக்கணித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி

கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லனகுப்பத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஊர்ப் பாதைக்காகத் தனது நிலத்தை வழங்க ரேவதியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமப் பஞ்சாயத்தினர், ரேவதியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

பொதுக் குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் எடுக்கக்கூடாது, கோவிலில் வழிபாடு நடத்தக்கூடாது, கிராமத்தில் யாரும் அவர்களுக்கு மளிகைப் பொருட்கள் விற்கக்கூடாது என மனிதாபிமானமற்ற கட்டுப்பாடுகளை கட்டப்பஞ்சாயத்தினர் விதித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் கடும் கண்டனம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நவீன காலத்தில் இத்தகைய செயல்கள் நடப்பது குறித்து வேதனை தெரிவித்தார். தனிமனித உரிமைகளை பறிக்கும் வகையில் ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதும், அடிப்படைத் தேவையான தண்ணீரை மறுப்பதும் அப்பட்டமான சட்ட மீறலாகும். சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய கட்டப்பஞ்சாயத்துகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

நீதிபதியின் உத்தரவுகள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து நேரில் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், அதில் தொடர்புடைய நபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட விளக்கம்

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 21 (வாழ்வுரிமை) மற்றும் பிரிவு 17 (தீண்டாமை ஒழிப்பு – பரந்த நோக்கில்) ஆகியவற்றின் அடிப்படையில், ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்துகளை ஒழிக்க ஏற்கனவே பல நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், இத்தகைய சம்பவங்கள் தொடர்வது கவலையளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலப் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Admin
1 Min Read

மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ அராஜகம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு – ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Admin
1 Min Read

You Might Also Like

Chennai BenchMadras HC Judgments

பொதுத்துறை ஊழியர் ஊதிய உயர்வு: “அரசின் ஒப்புதல் இன்றி வழங்க முடியாது” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

1 Min Read
Chennai BenchMadras High CourtUncategorized

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

2 Min Read
Chennai Bench

“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியுமா?” – ஜான் டேவிட் முதல் பல ஆயுள் கைதிகள் வரை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி விசாரணை!

2 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

பள்ளிக்கரணை அருகே கட்டுமானத் தடை – தமிழக அரசுக்கு உத்தரவு!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?