Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 10, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

புளியங்குடி கொள்ளை மற்றும் முதியவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணையில் சந்தேகம் – சிபிசிஐடி-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
Last updated: April 10, 2026 12:12 pm
Admin
Share
SHARE

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடந்த ₹22 லட்சம் கொள்ளை மற்றும் அதனைத் தொடர்ந்து புகார்தாரர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்குகளில், உள்ளூர் போலீஸாரின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, விசாரணையை சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவில் கடந்த ஜனவரி 2, 2025 அன்று எனது வீட்டின் கதவை உடைத்து ₹22 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக எனது தந்தை புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த எனது தந்தை, ஜனவரி 24, 2025 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். தந்தையின் இறப்பிற்குப் பிறகே, திருட்டு மற்றும் மரணம் தொடர்பாகத் தனித்தனியாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். உள்ளூர் போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லாததால், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

வழக்கறிஞரின் வாதம்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். கருணாநிதி நகை மற்றும் பணம் திருட்டு தொடர்பாகப் புகார் அளித்தும், 23 நாட்கள் தாமதமாகவே போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர். இந்தத் தாமதம் மற்றும் விசாரணை முறையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, நேர்மையான விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நீதிபதியின் சரமாரியான கேள்விகள்

மனுவை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி, காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கடுமையாகச் சாடினார். திருட்டு புகார் கையாளப்பட்ட விதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முதல் தகவல் அறிக்கையை (FIR) உரிய நேரத்தில் நீதித்துறை நடுவருக்கு (Magistrate) அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம், காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. விசாரணையில் நேர்மை அல்லது பாரபட்சமின்மை இல்லை என நீதிமன்றம் கருதினால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற முழு அதிகாரம் உள்ளது என நீதிபதி தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

காவல்துறையின் செயல்பாட்டில் திருப்தி அடையாத நீதிபதி, புளியங்குடி கொள்ளை மற்றும் மர்ம மரணம் ஆகிய இரண்டு வழக்குகளின் விசாரணையும் உடனடியாக சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, 12 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

முக்கியத்துவம்: காவல் துறையினர் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது எவ்வாறு வழக்கை சீர்குலைக்கும் என்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நீதிமன்றம் தலையிடும் என்பதையும் இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

Madras High CourtMadurai Bench

அரசு நிலங்களை பாதுகாப்பதில் மெத்தனம்: ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

2 Min Read
Madurai Bench

பட்டியல் சாதியினருக்கான நிதி பயன்பாடு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read
Chennai BenchMadras High CourtMadurai BenchSupreme Court

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை

1 Min Read
Madras High CourtMadurai Bench

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு: நீதிமன்றம் காலக்கெடு!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?