Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 10, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
Last updated: April 10, 2026 5:10 pm
Admin
Share
SHARE

மதுரை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் (Preventive Detention) வைக்கப்பட்டுள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கில், சிறையில் உள்ள கைதிகளின் விவரங்களைச் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தேனியைச் சேர்ந்த சஃபானா பானு என்பவர் தாக்கல் செய்த மனுவில் எனது கணவர் முகமது சிராஜுதீன் தற்போது மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. எனவே, அவர் தபால் மூலம் வாக்களிக்கத் தேவையான வசதிகளைச் சிறைத்துறை அதிகாரிகள் செய்து தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்

நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழ்நாடு சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் உடனடியாக மதுரை மத்திய சிறைக்குச் சென்று ஆய்வு நடத்த வேண்டும். சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் (Preventive Detention) தற்போது எத்தனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் வரும் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர்? எத்தனை பேரிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன?
என்பது போன்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் அறிக்கையாகத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

சட்ட விதி என்ன சொல்கிறது?

இந்தியத் தேர்தல் விதிகளின்படி (Representation of the People Act, 1951 – Section 62(5)), சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் அல்லது விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது. ஆனால், தடுப்புக் காவலில் (Preventive Detention) வைக்கப்பட்டுள்ள நபர்கள் தபால் மூலம் வாக்களிக்க சட்டத்தில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை ஒத்திவைப்பு

இந்த விவரங்களைப் பெற்று தீர்மானிப்பதற்காக, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முக்கியத்துவம்: சிறையில் இருப்பவர்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வது தொடர்பான இந்த உத்தரவு, தேர்தல் சமயத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

புளியங்குடி கொள்ளை மற்றும் முதியவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணையில் சந்தேகம் – சிபிசிஐடி-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

“ஊழல் புகார்கள் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியது எப்படி?” – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

2 Min Read
Madurai Bench

“மக்களின் உயிரோடு விளையாடுவதா?” – தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத படகு சவாரிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2 Min Read
Madurai Bench

“போஸ்டர் ஒட்டுபவர்களுக்குக் கூட அரசுப் பதவி… நுணுக்கங்கள் தெரியாத வழக்கறிஞர்கள்”: மதுரை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

2 Min Read
Madurai Bench

“காவல்துறை விசாரணையில் நம்பிக்கையில்லை!” – தீக்குளித்து உயிரிழந்த நாராயணனின் மரண வழக்கை மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?