Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, May 3, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

ஆதவ் அர்ஜுனா மீதான சொத்து மறைப்பு வழக்கு: 20 நிறுவனங்களின் விவரங்களை மறைத்ததாகப் புகார்!

Admin
Last updated: April 17, 2026 3:09 pm
Admin
Share
SHARE

வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது மனைவிக்குத் தொடர்புடைய பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களின் விவரங்களை வேட்புமனுவில் மறைத்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

  • பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் எம். கருணாநிதி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்தத் தேர்தல் வழக்கில் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி ஆதவ் அவர்களுக்கு சொந்தமான மற்றும் அவர் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் வேட்புமனுவில் உள்ள பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) குறிப்பிடப்படவில்லை.
  • குறிப்பாக, ‘மார்ட்டின் ரியல்கான் பிரைவேட் லிமிடெட்’ (Martin Realcon Private Limited) உள்ளிட்ட லாபம் ஈட்டும் பல நிறுவனங்களில் அவரது மனைவிக்கு உள்ள பங்குகள் மற்றும் முதலீடுகளை அவர் திட்டமிட்டு மறைத்துள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
  • ஆதவ் அர்ஜுனா தனது குடும்பத்தின் மொத்தச் சொத்து மதிப்பு சுமார் ₹197 கோடி எனக் காட்டியுள்ளார். ஆனால், மறைக்கப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பைச் சேர்த்தால் இந்தத் தொகை பல மடங்கு அதிகரிக்கும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனுதாரரின் வாதம்

“ஊழலற்ற, வெளிப்படையான அரசியலை முன்னெடுப்பதாகத் தமிழக வெற்றிக் கழகம் முழங்கி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியே இப்படி உண்மைகளை மறைப்பது வாக்காளர்களை ஏமாற்றும் செயலாகும்” என்று மனுதாரர் தரப்பில் காரசாரமாக மனுவில் குறிப்பிடப்பட்டுளது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

மறைக்கப்பட்ட நிறுவனங்களின் நிதி ஆதாரங்கள் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை (Income Tax) விரிவான விசாரணை நடத்த வேண்டும். தவறான தகவல்களை அளித்ததற்காக ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை ஏற்ற தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏப்ரல் 23 வாக்குப்பதிவுக்கு முன்னதாகவே இந்த விசாரணை அறிக்கையைத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுதாரர் வைத்துள்ளார்.

தற்போதைய சட்ட நிலை

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே விஜய், உதயநிதி ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் சொத்து மறைப்பு புகார்கள் எழுந்துள்ளதால், இவை அனைத்தையும் ஒரே முக்கியத்துவத்துடன் நீதிமன்றம் அணுக வாய்ப்புள்ளது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

அரசு முத்திரைகள் மற்றும் எடைகளில் மோசடி: சட்டம் சொல்லும் தண்டனைகள்!

Admin
2 Min Read

வங்கிச் சேவையில் குறைபாடா? தீர்வு காண இதோ வழிகள்!

Admin
2 Min Read

மத்திய அரசின் புதிய குடியுரிமை விதிகள் 2026: சிறார்களுக்கு இரு நாட்டுப் பாஸ்போர்ட் தடை – OCI சேவைகளும் டிஜிட்டல் மயம்!

Admin
1 Min Read

தவெக வேட்பாளர் மீதான ₹85 லட்சம் மோசடி வழக்கு: சிபிசிஐடி விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

Admin
1 Min Read

You Might Also Like

Chennai Bench

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. மனு!

2 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

அரசு அப்பீல் தாமதம் – விஜிலென்ஸ் விசாரணை அவசியம்

1 Min Read
Chennai Bench

“4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதி” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

2 Min Read
Chennai BenchMadras HC Judgments

4 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?