Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 17, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“விவசாய நிலங்களுக்கு கூடுதல் பத்திரப்பதிவு கட்டணம்”: பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
Last updated: April 17, 2026 3:57 pm
Admin
Share
SHARE

விவசாய நிலங்களை விற்பனை செய்யும் போது, அதன் வழிகாட்டி மதிப்பை நியாயமற்ற முறையில் உயர்த்தி கூடுதல் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழகப் பதிவுத்துறைத் தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

மதுரை துவரிமான் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் விவசாயிகள் தங்களது பிள்ளைகளின் கல்வி அல்லது திருமணச் செலவுக்காக நிலத்தை விற்க முற்படும் போது, சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பை அதிகாரிகள் பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். இதனால் நிலத்தை வாங்குபவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், நிலத்தை வாங்க யாரும் முன்வருவதில்லை. இது விவசாயிகளைப் பொருளாதார ரீதியாகப் பாதித்து, அவர்களைத் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்குத் தள்ளுகிறது. சில நேரங்களில் விவசாய நிலங்களை ‘வீட்டுமனைகளாக’ (Plots) வகைப்படுத்தி, அதன் மூலம் கூடுதல் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தைப் பதிவுத்துறை வசூலிப்பது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணை

இந்த மனு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பதிவுத்துறை தனது வருவாயைப் பெருக்குவதற்காக விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகக் கணக்கு காட்டி, விவசாயிகளைத் துன்புறுத்தி வருகிறது” என்று வாதிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவு

மனுதாரரின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விவசாய நிலங்களின் வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது மற்றும் வகை மாற்றம் செய்வது குறித்து பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் விரிவான பதிலளிக்க வேண்டும். வழிகாட்டி மதிப்பை உயர்த்திப் பதிவுக்கட்டணம் பெறுபவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

முக்கியத்துவம்: தமிழகம் முழுவதும் வழிகாட்டி மதிப்பு அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், குறிப்பாக விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகக் கருதப்பட்டு வரி வசூலிக்கப்படுவது தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகார், பல மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு முக்கியத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்டந்தோறும் தனி அதிகாரி”: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
2 Min Read

“இன்னமும் தனித்தனி மயானங்களா?” – நீர்நிலை ஆக்கிரமிப்பு மயானத்திற்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் வேதனை!

Admin
2 Min Read

“அதே நபர் மீண்டும் புகார் அளித்ததில் உள்நோக்கம் என்ன?” – தொழிலதிபர் கைது விவகாரத்தில் திருச்சி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

Admin
2 Min Read

“மதக் கலவரத்தைத் தூண்டியவருக்கு ஜாமீனா?” – மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

“தேர்தல் விதிகள் பக்திக்குத் தடையல்ல!” – கோயில் திருவிழா இசை நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்றம்!

2 Min Read
Madurai Bench

“திருவிழா ராட்டினங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” – மதுரை அமர்வு உத்தரவு!

1 Min Read
Madurai Bench

“மக்களின் உயிரோடு விளையாடுவதா?” – தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத படகு சவாரிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

2 Min Read
Madras HC JudgmentsMadurai Bench

ஈரானில் சிக்கியுள்ள 600 மீனவர்கள் மீட்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?