Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, May 3, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Articles & Opinions

வங்கிச் சேவையில் குறைபாடா? தீர்வு காண இதோ வழிகள்!

Admin
Last updated: April 28, 2026 4:48 pm
Admin
Share
SHARE

வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் சிக்கல்கள், ஏ.டி.எம் குளறுபடிகள் அல்லது கடன் வழங்குவதில் உள்ள தாமதங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சிறப்பான அமைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே வங்கி குறைதீர்ப்பாயம் (Banking Ombudsman).

Contents
  • வங்கி குறைதீர்ப்பாயம் (Ombudsman) என்றால் என்ன?
  • எந்தெந்த வங்கிகள் இச்சட்டத்தின் கீழ் வரும்?
  • புகாரளிக்க வேண்டிய முறைகள் (Step-by-Step)
  • அதிக அளவில் பதிவாகும் புகார்கள்
  • புகாரை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? (தொடர்பு முகவரி)
  • கவனிக்க வேண்டியவை

வங்கி குறைதீர்ப்பாயம் (Ombudsman) என்றால் என்ன?

வங்கி சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து, உரிய தீர்வு காண ரிசர்வ் வங்கியால் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்ட ரீதியிலான அமைப்பு இதுவாகும். இதில் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் நடுவர்களாகச் செயல்படுவர்.

எந்தெந்த வங்கிகள் இச்சட்டத்தின் கீழ் வரும்?

  • அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள்.
  • வெளிநாட்டு வங்கிகள்.
  • மண்டல கிராமப்புற வங்கிகள் (RRB).
  • கூட்டுறவு வங்கிகள்.

புகாரளிக்க வேண்டிய முறைகள் (Step-by-Step)

நிலை 1: சம்பந்தப்பட்ட வங்கி முதலில் உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரிடமோ அல்லது அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திலோ பதிவு செய்ய வேண்டும்.

நிலை 2: கால அவகாசம் நீங்கள் புகார் அளித்த 30 நாட்களுக்குள் (ஒரு மாதம்) வங்கி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதில் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ நீங்கள் குறைதீர்ப்பாயத்தை அணுகலாம்.

நிலை 3: குறைதீர்ப்பாயத்தில் மேல்முறையீடு வங்கி குறைதீர்ப்பாயத்திற்குப் புகாரை அனுப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. சாதாரண காகிதத்தில் எழுதியோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ புகாரைப் பதிவு செய்யலாம்.


அதிக அளவில் பதிவாகும் புகார்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சுமார் 66 சதவீத புகார்கள் கீழ்க்கண்ட காரணங்களுக்காகப் பதிவாகின்றன:

  • ஏ.டி.எம் (ATM) சிக்கல்கள்: பணம் வராமலேயே கணக்கில் கழிக்கப்படுதல்.
  • கிரெடிட் கார்டு (Credit Card): தவறான கட்டணங்கள் வசூலித்தல்.
  • கல்விக் கடன்: கடன் வழங்குவதில் தாமதம் அல்லது முறையற்ற நிராகரிப்பு.
  • இணைய வங்கி (Internet Banking): ஆன்லைன் பணப் பரிமாற்றக் குளறுபடிகள்.

புகாரை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? (தொடர்பு முகவரி)

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களைத் தபால் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:

வங்கி குறைதீர்ப்பாளர் (Banking Ombudsman) இந்திய ரிசர்வ் வங்கி (2-வது தளம்), 16, ராஜாஜி சாலை, சென்னை – 600 001.

தொலைபேசி: 044- 2539 9170 / 2539 9159 / 2539 5964 மின்னஞ்சல் (E-mail): bochennai@rbi.org.in இணையதளம்:https://cms.rbi.org.in


கவனிக்க வேண்டியவை

  • உங்கள் புகார் உண்மையானதாகவும், ஆதாரங்களுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  • வங்கிக்கு நீங்கள் ஏற்கனவே அளித்த புகார் கடிதத்தின் நகல் மற்றும் வங்கி அளித்த பதில் (இருந்தால்) ஆகியவற்றை இணைப்பது அவசியமாகும்.
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

அரசு முத்திரைகள் மற்றும் எடைகளில் மோசடி: சட்டம் சொல்லும் தண்டனைகள்!

Admin
2 Min Read

மத்திய அரசின் புதிய குடியுரிமை விதிகள் 2026: சிறார்களுக்கு இரு நாட்டுப் பாஸ்போர்ட் தடை – OCI சேவைகளும் டிஜிட்டல் மயம்!

Admin
1 Min Read

தவெக வேட்பாளர் மீதான ₹85 லட்சம் மோசடி வழக்கு: சிபிசிஐடி விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

Admin
1 Min Read

“அரசை விமர்சிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை” – ராகுல் காந்திக்கு எதிரான தேசத்துரோக மனுவை நிராகரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்!

Admin
2 Min Read

You Might Also Like

Articles & Opinions

கைது முதல் சிறை வரை: சட்டம் சொல்லும் நடைமுறைகள் என்ன?

2 Min Read
Articles & Opinions

ஒப்பந்தம் செய்யாமல் வீடு வாடகைக்கு விடலாமா? புதிய சட்டம் என்ன சொல்கிறது?

3 Min Read
Articles & OpinionsTN Acts & Amendments

நீதிமன்ற உறுத்துக்கட்டளை (Injunction Order) – ஒரு தெளிவான விளக்கம்

2 Min Read
Articles & Opinions

பொய் சாட்சி சொன்னால் என்ன நடக்கும்? சட்டமும் தண்டனைகளும்!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?