Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 17, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“தனித் தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியா?” – அர்ஜுன் சம்பத்தின் மனுவை நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்!

Admin
Last updated: April 6, 2026 12:28 pm
Admin
Share
SHARE

தமிழகத்தில் உள்ள 44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், இந்திய அரசியல் சாசனம் வரையறுத்துள்ள மதங்களைப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

மனுதாரரின் முக்கியக் குற்றச்சாட்டு

  • அர்ஜுன் சம்பத் சார்பில் வழக்கறிஞர் எஸ். கார்த்திகைபாலன் தாக்கல் செய்த மனுவில் இந்திய அரசியல் சாசனத்தின்படி, தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவர் (SC) மட்டுமே போட்டியிடத் தகுதியானவர்கள்.
  • ஒருவர் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது, அவர் சட்டப்படி ‘பட்டியல் இன’ அந்தஸ்தை இழக்கிறார். எனவே, அவர் தனித் தொகுதியில் போட்டியிட முடியாது என உச்ச நீதிமன்றமும் அண்மையில் வலியுறுத்தியுள்ளது.
  • தற்போது 44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 90 சதவீதத்தினர் இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதத்தைப் பின்பற்றாதவர்கள் என்றும், அவர்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

வேட்புமனு பரிசீலனையின் போது, அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் மத அடையாளங்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவசர வழக்கு

வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைந்து, நாளை (ஏப்ரல் 7) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இதனால், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, அர்ஜுன் சம்பத்தின் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளது.

தேர்தல் களத்தில் ஏற்படும் தாக்கம் - விளக்கம்

நாளை நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால், அது தமிழகத்தின் 44 தனித் தொகுதிகளிலும் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். வேட்பாளர்கள் தங்களது மதத்தை மறைத்து சாதி சான்றிதழை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இது பல முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சிக்கலை உருவாக்கலாம்.

ஒரு சட்டக் குறிப்பு - 1950-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆணை

1950-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ‘பட்டியல் சாதியினர் ஆணை’ (The Constitution (Scheduled Castes) Order, 1950), இந்து மதத்தைத் தவிர பிற மதங்களுக்கு (பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் சேர்க்கப்பட்டது) மாறுபவர்கள் பட்டியல் சாதிப் பிரிவில் வரமாட்டார்கள் என்று கூறுகிறது. இது தொடர்பான சட்டப் போராட்டம் பல தசாப்தங்களாக இந்தியாவில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்டந்தோறும் தனி அதிகாரி”: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
2 Min Read

“இன்னமும் தனித்தனி மயானங்களா?” – நீர்நிலை ஆக்கிரமிப்பு மயானத்திற்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் வேதனை!

Admin
2 Min Read

“அதே நபர் மீண்டும் புகார் அளித்ததில் உள்நோக்கம் என்ன?” – தொழிலதிபர் கைது விவகாரத்தில் திருச்சி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

Admin
2 Min Read

“மதக் கலவரத்தைத் தூண்டியவருக்கு ஜாமீனா?” – மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

பாமக சின்னத்தை முடக்கக் கோரிய நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மனு தள்ளுபடி

3 Min Read
Chennai Bench

“இரண்டாவது போட்டியையும் கண்டு ரசியுங்கள்!” – ஐ.பி.எல். போட்டிகளைத் தள்ளிவைக்கக் கோரிய மனுத் தள்ளுபடி!

1 Min Read
Chennai BenchMadras HC Judgments

4 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!

2 Min Read
Chennai Bench

பா.ம.க. உள்கட்சி மோதல்: ராமதாஸ்-க்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?