Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchMadras HC JudgmentsMadras High Court

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Admin
Last updated: March 3, 2026 8:58 am
Admin
Share
SHARE

தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மெகா ஊழல் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்பியதில் சுமார் 634 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கைமாறியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய ஆய்வில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அமலாக்கத் துறையின் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு, அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் இருப்பதாக கருதியது. அதன் அடிப்படையில், இந்த முறைகேடு குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும், இது நீதிமன்ற உத்தரவை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் கூறி இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்

  • அரசுத் தரப்பு வாதம்: வழக்குப்பதிவு செய்ய சொன்ன உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிர்த்து, அதே நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு (Review Petition) தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
  • நீதிமன்றத்தின் கண்டனம்: நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது, அதனை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகார்: “முகாந்திரம் இல்லை” – நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

2 Min Read
Chennai Bench

துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டம்: ஜூன் 29-ல் இறுதி விசாரணை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

2 Min Read
Tamil Nadu Law

“குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது” – விஜய் மற்றும் TVK கட்சிக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் புகார்!

2 Min Read
Madurai Bench

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: “தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” – சி.பி.ஐ. கடும் வாதம்!

3 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?