Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Supreme Court

எஸ்.ஐ.ஆர் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் மம்தா அனல்பறக்கும் வாதம்

Admin
Last updated: February 5, 2026 5:45 am
Admin
Share
SHARE

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய நிலையில், அவரது மனுவுக்கு 2 நாட்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தானே நேரில் ஆஜராகி வாதாட உள்ளதாக கூறி மம்தா பானர்ஜி முன்கூட்டியே அனுமதி கேட்டிருந்த நிலையில், மனுதாரர் என்ற முறையில் உச்ச நீதிமன்றமும் அவருக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி நேரில் ஆஜராகி வாதத்தை தொடங்கிய மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு 6 முறை கடிதங்கள் எழுதியும், இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும், நீதிமன்றம் சென்றும் நீதி மறுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மம்தா வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, எந்த வாக்காளர்களும் விடுபட்டு விடக்கூடாது என்பது தான் நீதிமன்றத்தின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

அப்போது இதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், இனியும் மெத்தனமாக செயல்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்து, வழக்கை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தனர்.

அதனை தொடர்ந்து வாதங்களை முன்வைத்த மம்தா பானர்ஜி, தன்னுடைய அடையாள அட்டையில் இருப்பது எனது புகைப்படமே அல்ல, மாறாக ஒரு செய்தி தாளில் இருந்து தேர்தல் ஆணையம் எடுத்து பயன்படுத்தி உள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும் எஸ்.ஐ.ஆர். பணிகளில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த பிறகும் மேற்கு வங்கத்தை மட்டுமே குறி வைப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மனு மீது இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு (பிப்ரவரி 9) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

TAGGED:election commissionmamata banerjeemamta banerjeeparty in personsir
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Supreme Court

திருநங்கையர் சட்டத் திருத்தம்: நலத்திட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை!

1 Min Read
Supreme Court

“அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்துவிட்டதா?” – அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!

2 Min Read
Supreme Court

“UAPA சட்டத்திலும் ஜாமீனே பொது விதி” – உமர் காலித் வழக்கைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து!

2 Min Read

“தாய்மைக்கு வயது எல்லை கிடையாது”: தத்தெடுக்கும் தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு விதியில் உச்ச நீதிமன்றம் அதிரடி மாற்றம்!

3 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?