Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

தொழிற்பேட்டை நிலத்தை ஆலை அமைக்க பயன்படுத்தாத நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Admin
Last updated: March 9, 2026 5:46 am
Admin
Share
SHARE

தொழிற்பேட்டை நிலத்தை ஒதுக்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தாமல், அதில் சோலார் பேனல்களை அமைத்த நிறுவனத்தின் நில ஒதுக்கீட்டை ரத்து செய்த SIPCOT நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வழக்கின் பின்னணி

பெங்களூரை சேர்ந்த Kems Forging Ltd என்ற நிறுவனத்திற்கு, சிப்காட் நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டு தொழில் தொடங்க நிலம் ஒதுக்கியது. இதற்காக 2006-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அந்த நிலத்தில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒதுக்கப்பட்ட 3.70 ஏக்கர் நிலத்தைப் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் அந்த நிறுவனம் காலியாக வைத்திருந்தது.

சிப்காட் எடுத்த அதிரடி நடவடிக்கை

நிலத்தை பயன்படுத்தாததால், 2012-ஆம் ஆண்டு சிப்காட் நிறுவனம் அந்த நிலத்தின் ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதனை மீண்டும் கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சிப்காட் எடுத்த முடிவு சரியானது என்று தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தின் விசாரணை மற்றும் வாதங்கள்

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதியரசர்கள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் கே. சுரேந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த நிறுவனம் தரப்பில், நிலத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகைப்பட ஆதாரங்கள் காட்டப்பட்டன.

இருப்பினும், நீதிபதிகள் அந்த வாதத்தை ஏற்க மறுத்தனர். மேலும்,

  • ஒதுக்கப்பட்ட நோக்கம்: நிலம் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவே வழங்கப்பட்டது. ஆனால் சோலார் பேனல் அமைப்பது ஒரு தொழில்துறை கட்டமைப்பு அல்ல.
  • ஒப்பந்த விதிமீறல்: குத்தகை ஒப்பந்தத்தின் 14(i) பிரிவின்படி, நிலம் ஒதுக்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாவிட்டால் அல்லது உபரியாக இருந்தால், அதனை மீண்டும் கையகப்படுத்த சிப்காட்டிற்கு முழு உரிமை உண்டு.

இறுதித் தீர்ப்பு

இந்த வழக்கில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் எந்த தவறும் இல்லை எனக் கூறி, நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதே சமயம், நில ஒதுக்கீட்டு விதிகளின்படி அந்த நிறுவனம் செலுத்தியிருந்த வைப்புத் தொகையைச் சிப்காட் திருப்பி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

“நீதித்துறையை விமர்சிப்பது பேச்சு சுதந்திர வரம்புக்குள் வரும்!” – நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ படத்திற்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு; வழக்கு தள்ளுபடி!

2 Min Read
Chennai Bench

“மாம்பழம் சின்னம் விவகாரம்: முறையீடு செய்தால் அவசர விசாரணை!” – பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு உயர் நீதிமன்றம் பதில்!

2 Min Read
Chennai Bench

மாணவி சோபியா கைது: மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி!

2 Min Read
Chennai BenchMadras High Court

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?