Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Monday, Jun 15, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“துணைவேந்தர் நியமன அதிகாரம்: கல்வியின் தரம் பாதிக்கப்படாது!” – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

Admin
Last updated: April 2, 2026 5:25 pm
Admin
Share
SHARE

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதால் கல்வியின் தரம் எந்த வகையிலும் குறையாது என்றும், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதில் மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

ஏற்கனவே உயர் நீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. ஆனால், தமிழக அரசின் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தத் தடையை நீக்கி, பிரதான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

தமிழக அரசின் பதில் மனு

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று (ஏப்ரல் 2, 2026) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்

  • மனுதாரர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்ற உண்மையை மறைத்து, அரசியல் ஆதாயத்திற்காக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். எனவே, இதனை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிகளுக்கு முரணானது அல்ல. யுஜிசி வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே தகுதியானவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • பல்கலைக்கழகங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இது நிர்வாக வசதிக்காக எடுக்கப்பட்ட முடிவு.
  • அரசு நியமிப்பதன் மூலம் கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உரியத் தேடுதல் குழுக்கள் (Search Committee) மூலமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

உள்ளிட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

நீதிமன்றத்தின் நடவடிக்கை

தமிழக அரசின் இந்த விரிவான பதில் மனுவைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 9, 2026-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்தும் அன்று விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் இந்தச் சட்டம் முக்கியமானது?

பொதுவாகப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) ஆளுநர் செயல்படுகிறார். அவரே துணைவேந்தர்களை நியமித்து வந்தார். ஆனால், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் அதிகாரப் போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அந்த அதிகாரம் வேண்டும் எனத் தமிழக அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் இதையொட்டி சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலப் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Admin
1 Min Read

மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ அராஜகம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு – ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Admin
1 Min Read

You Might Also Like

Chennai Bench

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் வேட்டை: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

1 Min Read
Chennai BenchMadras HC Judgments

பொதுத்துறை ஊழியர் ஊதிய உயர்வு: “அரசின் ஒப்புதல் இன்றி வழங்க முடியாது” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

1 Min Read
Chennai Bench

தேர்தல் கூப்பன் சர்ச்சை: உயர் நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் அவசர முறையீடு – நாளை விசாரணை!

1 Min Read
Chennai Bench

12 ஆண்டுகாலப் பணி: மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?