Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 10, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை!” – உயர் நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள்!

Admin
Last updated: April 1, 2026 5:09 pm
Admin
Share
SHARE

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இதில் நீதிமன்றம் தனியாக உத்தரவிடத் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மனுதாரரின் கோரிக்கைகள்

மனுதாரர் கே.கே. ரமேஷ் தனது மனுவில்

  • வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதைத் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும்.
  • பணப்பட்டுவாடாவைத் தடுக்கக் கூடுதல் பறக்கும் படைகளை (Flying Squads) நியமிக்க வேண்டும்.
  • பணப்பட்டுவாடா காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டால், அந்தத் தேர்தலுக்காக அரசு செய்த செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது கட்சித் தலைவரிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
  • பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாகப் பறக்கும் படைகளின் தொடர்பு எண்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.

தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் விளக்கம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் “தேர்தல் ஆணையத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்கி வருகிறது. பாரபட்சமின்றி சோதனைகள் நடத்தப்படுகின்றன. அண்மையில் முதலமைச்சரின் வாகனத்தையே பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்,” எனத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தமிழகம் முழுவதும் 2,169 பறக்கும் படைகளும், 2,166 கண்காணிப்புக் குழுக்களும் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றன. 100 நிமிடங்களுக்குள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என விளக்கம் அளித்தார்.

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விரிவான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதை பதிவு செய்து கொண்டனர்.

மனுதாரரின் கோரிக்கைகள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் உள்ளதால், தனியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தற்போதைய தேர்தல் நிலவரம்: ஒரு பார்வை

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக இதுவரை (மார்ச் 30 வரை) பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 'சிவிஜில்' (c-VIGIL) செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

தாட்கோ நிதி முறைகேடு புகார்: “லஞ்ச ஒழிப்புத் துறையை அணுகுங்கள்” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Admin
2 Min Read

மதுரை சிறை கைதிகள் வாக்களிக்க முடியுமா? – அறிக்கை தாக்கல் செய்ய சட்ட உதவிகள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

கீழச்செல்வனூர் மர்ம மரணங்கள்: “புகார் இல்லாதபோது எப்படி நடவடிக்கை?” – வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை அமர்வு

Admin
1 Min Read

“144 தடையைப் போட்டாவது ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்!” – கொடைக்கானல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchMadras High Court

மானிய விலையில் நாப்கின்கள்: ‘முதல்வர் மருந்தகங்கள்’ திட்டம் விரிவுபடுத்தப்படும் – தமிழக அரசு உறுதி!

2 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras HC JudgmentsMadras High Court

கொலை – 21 பேர் விடுதலை ரத்து – அனைவருக்கும் ஆயுள் தண்டனை : ஐகோர்ட்

2 Min Read
Chennai Bench

மத்திய அமைச்சர் எல். முருகன் நிம்மதி – தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

2 Min Read
Chennai Bench

“மதம் குறித்த சர்ச்சை: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு” – வேட்புமனு பரிசீலனைக்குத் தடையில்லை!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?