Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai BenchMadras High Court

ஜனநாயகன் தணிக்கை சான்று வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

Admin
Last updated: February 10, 2026 5:52 am
Admin
Share
SHARE

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற கே.வி.என். புரொடக்சன்ஸ் அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத்தை தயாரித்த கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று ஜனவரி 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் அவரிடமே விசாரணைக்கு அனுப்பி ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்ப பெற உள்ளதாக கூறி, கே.வி.என். புரொடக்சன்ஸ் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், “மனுவை வாபஸ் பெறுவதற்காக” என்ற தலைப்பில் பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு, தனி நீதிபதி பி.டி.ஆஷா முன் பட்டியலிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆஷா வழக்கை திரும்பப்பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

TAGGED:cinemadismissedjananayaganMadras High Courtvijaywithdrawn
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் மீது பாஜக வழக்கறிஞர் வழக்கு: “ஆதாரம் எங்கே?” – உயர் நீதிமன்றம் கடும் கேள்வி!

2 Min Read
Madurai Bench

“திருநங்கைகளும் கடவுளின் பிள்ளைகளே!” – யூடியூபருக்கு முன்ஜாமீன்; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 Min Read
Madurai Bench

“வேல் இருக்கும் இடத்தில் முருகன் இருப்பது தவறல்ல” – திண்டுக்கல் கோணப்பட்டி மலையில் மீண்டும் சிலையை வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read
Chennai Bench

சென்னை கே.கே.நகரில் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?