Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“திருட்டுத்தனமாக வெளியிட 1,404 இணையதளங்களுக்குத் தடை!” – லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்திற்கு உயர் நீதிமன்றம் பாதுகாப்பு!

Admin
Last updated: April 3, 2026 12:02 pm
Admin
Share
SHARE

லெஜண்ட் சரவணன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்தைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது சட்டவிரோதமாக ஒளிபரப்பவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லெஜண்ட் சரவணனின் திரைப் பயணம்

‘தி லெஜண்ட்’ (2022) படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அருள் சரவணன், தற்போது ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லீடர்’ படத்தில் நடித்துள்ளார். தனது மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில், ஒரு தந்தையாக வில்லன்களை எதிர்கொண்டு மகளை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் விறுவிறுப்பான கதையாகும்.

இப்படத்தின் டீசர் 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியானது.

1,404 இணையதளங்களுக்குத் தடை கோரி மனு

இப்படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிவதைத் தடுக்க, லெஜண்ட் சரவணன் சார்பில் டி. ஸ்டான்லி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

பல மாத உழைப்பு மற்றும் மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1,404 இணையதளங்கள் மற்றும் 26 இணையச் சேவை நிறுவனங்கள் மூலம் படம் சட்டவிரோதமாக வெளியானால், தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். இது திரைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்,” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் வாதிட்டார்

நீதிபதியின் உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ‘லீடர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் இணைய சேவை நிறுவனங்கள் (ISPs) மற்றும் கேபிள் டிவி நிறுவனங்கள், இந்தப் படம் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்புரிமை மீறல்களை தடுத்து, படத்தின் வணிக ரீதியான வெற்றியை உறுதி செய்ய இந்தத் தடை அவசியம் என நீதிபதி குறிப்பிட்டார்.

'ஆன்டி-பைரசி' (Anti-Piracy) சட்டம் - விளக்கம்!

திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவது 'காப்புரிமைச் சட்டம் 1957'-ன் படி குற்றமாகும். இதற்காகத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி 'ஜான் டோ' (John Doe) வகை உத்தரவுகளைப் பெறுவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் அடையாளம் தெரியாத இணையதளங்கள் கூடத் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

“₹397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகார்” – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்!

2 Min Read
Chennai BenchMadras HC JudgmentsMadras High Court

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேடு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

2 Min Read
Chennai BenchMadras HC Judgments

4 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!

2 Min Read
Chennai Bench

“4.5 லிட்டர் விலக்கு புதுச்சேரி மதுவிற்குப் பொருந்தாது” – உயர் நீதிமன்றத்தில் அரசு திட்டவட்ட விளக்கம்; நாளை விசாரணை!

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?