Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Jul 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

27 நாட்கள் தாமதம்… பாதியளவு கஞ்சா எங்கே?” – போதைப்பொருள் வழக்கில் மேற்கு வங்க நபரை விடுதலை செய்தது சென்னை நீதிமன்றம்!

Admin
Last updated: April 4, 2026 1:04 pm
Admin
Share
SHARE

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், உரிய நடைமுறைகளைப் பின்பற்ற தவறியது மற்றும் மொழிபெயர்ப்பில் குளறுபடி செய்ததை கண்டித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை கிழக்கு தாம்பரம் எம்.சி.சி. கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார், மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அப்துல் ஆலிம் என்பவரை இரண்டு பைகளில் 30 கிலோ கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி கைது செய்தனர்.

நீதிமன்றம் சுட்டிக்காட்டிய 4 முக்கியக் குளறுபடிகள்

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். கோவிந்தராஜன், காவல்துறையின் விசாரணையில் இருந்த மிகப்பெரிய ஓட்டைகளைத் தனது தீர்ப்பில் பட்டியலிட்டுள்ளார்.

  • இரண்டு பைகளில் கஞ்சாவைப் பறிமுதல் செய்ததாகக் கூறும் காவல்துறை, நீதிமன்றத்தில் ஒரே ஒரு பையை மட்டுமே தாக்கல் செய்துள்ளது. மீதமுள்ள கஞ்சா குறித்துத் தெளிவான விளக்கம் இல்லை.
  • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், 27 நாட்கள் தாமதமாக ஒப்படைத்துள்ளனர். இந்த தாமதத்திற்கு எந்த ஒரு நியாயமான காரணத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.
  • குற்றம் சாட்டப்பட்டவரின் தாய்மொழி பெங்காலி. ஆனால், வழக்கு விவரங்களை ஹிந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். அவருக்கு ஹிந்தி தெரியும் என்பதற்கான எந்த ஆவணத்தையும் அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை. அவருக்குப் புரியாத மொழியில் விளக்கம் அளித்தது சட்டப்படி செல்லாது.
  • அவர் மேற்கு வங்கத்தில் இருந்து வந்ததற்கான பயண ஆவணங்களோ அல்லது சம்பவ இடத்தின் கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு

இந்த நியாயமான சந்தேகங்களை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்துல் ஆலிமை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து (Acquittal) உத்தரவிட்டார்.

NDPS சட்டத்தின் கடுமை - விளக்கம்!

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் மிகவும் கடுமையானவை. எனவே, அதில் காவல்துறையினர் பின்பற்றும் நடைமுறைகள் (பறிமுதல் செய்த நேரத்தைப் பதிவு செய்தல், உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைத்தல் போன்றவை) மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். இதில் சிறு தவறு நடந்தாலும், அது ‘சந்தேகத்தின் பலனை’ (Benefit of Doubt) எதிர்தரப்புக்கு கொடுத்துவிடும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலப் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Admin
1 Min Read

மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ அராஜகம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு – ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Admin
1 Min Read

You Might Also Like

Chennai BenchMadras HC Judgments

கூட்டுறவு துறை பணி நியமனம்: காலக்கெடு விதித்த உயர் நீதிமன்றம்!

2 Min Read
Chennai Bench

கோவில் உபரி நிதி முதலீட்டு விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

18 Min Read
Chennai BenchTamil Nadu Law

திருமண நிதியுதவித் திட்டம்: உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு!

2 Min Read
Chennai Bench

உதயநிதி சொத்து விவரம் – வருமான வரித்துறை அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?