Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madras High CourtMadurai Bench

கச்சத்தீவு திருவிழா – மோட்டார் பொருத்திய ஃபைபர் வல்லம் படகில் செல்ல அனுமதிக்க முடியாது : உயர் நீதிமன்றம்

Admin
Last updated: February 3, 2026 11:59 am
Admin
Share
SHARE

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்தப்பட்ட ஃபைபர் இழையால் ஆன வல்லம் படகுகளில் செல்ல அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ள ஓலைக்குடா பகுதியை சேர்ந்த ஜெ.பிரின்சோ ரேமண்ட் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கின் மனுவில், பாரம்பரிய மீனவர்கள், தங்களின் குடும்பத்தினரோடு மோட்டார் பொருத்தப்பட்ட வல்லம் படகுகளில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், பாதுகாப்பு காரணங்களை கூறி வல்லத்தில் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், மீன்பிடிக்க செல்லும்போது எந்த பாதுகாப்புடன் சொல்கிறார்களோ அதே பாதுகாப்புடனேயே தேவாலயத்துக்கு செல்வார்கள் என்பதால், அனுமதி வழங்க வேண்டும். மேலும், அரசும் மீனவ படகிலேயே கட்சத்தீவிற்கு பக்தர்கள் உள்ளிட்டோரை அழைத்துச் செல்கின்ற நிலையில், மீனவர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், வல்லத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதா என்பதை முடிவு செய்ய தங்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்றும், நிபுணத்துவம் பெற்றவர்கள் முடிவு செய்து சொல்லும்போது நீங்கள் அதனை மறுத்தால், நீதிமன்றம் எப்படி முடிவு செய்ய இயலும் என கேள்வி எழுப்பியதுடன், படகின் தன்மை, கடலின் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே பயணம் அமையும் என தெரிவித்தனர். நீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் படகு பைபர் படகு அல்ல என்றும், அது பயணத்திற்கான படகு தான் என்பதையும், சர்வதேச கடல் எல்லை போன்ற பிற விவகாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

அப்போது, மனுதாரர் தரப்பில், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம் மீனவர்களால் கட்டப்பட்டது என்பதால், எந்த ஆவணமும் இன்றி கச்சத்தீவிற்கு செல்ல விதிகள் அனுமதிக்கின்றன என்றும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் மரத்தால் ஆன வல்லம் படகுகளில் அரசு பக்தர்களை அழைத்துச் செல்வதாகவும், நபர் ஒருவருக்கு 2000 ருபாய் வசூலிக்கப்படுவதாவும், மீனவர்களின் பொருளாதரா சூழலில் அவ்வளவு தொகை செலுத்த இயலாது என்றும், அதனால், இயந்திரம் பொருத்தப்பட்ட ஃபைபர் இழையால் ஆன வல்லத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால், அரசுத் தரப்பில், கட்டுமரம் அல்லது வல்லத்தில் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவிலான மீன் பிடிக்கும் படகுகள் கச்சத்தீவு பயணத்திற்காக பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவின் போது பக்தர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே சில விதிகள் வகுக்கப்படுகின்றன என்றும், அதில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும் கூறி, இயந்திரம் பொருத்தப்பட்ட ஃபைபர் இழையால் ஆன வல்லத்தில் செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

TAGGED:churchfiber boatislandkachatheevuMadras High Courtmaduraimadurai benchsrilankast anthony'svallam boat
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai Bench

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு: மே 12-ல் நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் உத்தரவு!

2 Min Read
Chennai BenchMadras High Court

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

1 Min Read
Chennai Bench

“தனித் தொகுதிகளில் கிறிஸ்தவர்கள் போட்டியா?” – அர்ஜுன் சம்பத்தின் மனுவை நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்!

2 Min Read
Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

சாதிப் பெயருக்கு பதில் தாய் தந்தை கோவில் பெயர் சூட்டக் கோரிய மனு தள்ளுபடி

1 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?