Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Friday, Apr 17, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Chennai Bench

“அன்புமணிக்கும் எனக்கும் தொடர்பில்லை”: தேர்தல் பிரச்சாரத்தில் தனது புகைப்படத்தைப் பயன்படுத்த ராமதாஸ் தடை கோரிக்கை!

Admin
Last updated: April 17, 2026 1:20 pm
Admin
Share
SHARE

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகச் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

வழக்கின் முக்கிய அம்சங்கள்

டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் பாமக தலைவராக நீடிக்கும் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த 18 வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்தக் கூடாது. தற்போது எனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பாமக தலைவராக நீடிப்பதே சட்டவிரோதமானது” என்று ராமதாஸ் தனது மனுவில் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை 13-வது உரிமையியல் நீதிமன்றம், அன்புமணி ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் 18 பேருக்கும் இது குறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கின் பின்னணி

பாமகவில் கடந்த சில மாதங்களாகத் தலைமைப் பொறுப்பு தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே கட்சியின் ‘மாம்பழம்’ சின்னத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. தனது மகனின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், தானே தற்போது கட்சியின் தலைவர் என்றும் ராமதாஸ் கூறி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பையே அங்கீகரித்துள்ளது.

நீதிமன்றத்தின் தற்போதைய நிலை

இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சியின் முகமாகப் பார்க்கப்படும் நிறுவனரே தனது புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை கோரியிருப்பது பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தாக்கம்: தேர்தல் பிரச்சாரங்களில் பொதுவாக ஒரு கட்சியின் நிறுவனர் அல்லது மூத்த தலைவர்களின் புகைப்படங்களே வாக்கு சேகரிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால், பாமகவில் நிலவும் இந்தத் தந்தை-மகன் மோதலால், 18 தொகுதிகளில் போட்டியிடும் அன்புமணி ஆதரவு வேட்பாளர்கள் ராமதாஸின் படத்தை இன்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் உருவாகுமா என்பது ஏப்ரல் 21-ம் தேதி தெரியவரும்.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“விவசாய நிலங்களுக்கு கூடுதல் பத்திரப்பதிவு கட்டணம்”: பதிவுத்துறை தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
2 Min Read

“சோஹோ நிறுவன நிதி பாஜக வேட்பாளர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா?” – ஸ்ரீதர் வேம்புவிடம் விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Admin
2 Min Read

“முதலமைச்சரின் செயலாளர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” – உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

Admin
2 Min Read

அதிமுக வேட்பாளர் க்யூ ஆர் கோடு டோக்கன் விவகாரம்: தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தால் வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchHigh Court JudgmentsMadras High Court

கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் : ஐகோர்ட்

1 Min Read
Chennai Bench

பாமக உள்கட்சி மோதல் உச்சகட்டம்: ராமதாஸின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அன்புமணி மற்றும் வடிவேல் ராவணன் மனு!

2 Min Read
Chennai Bench

ஒரே சம்பவத்திற்கு இரண்டு FIR-ஆ? நெல்லை தீயணைப்புத் துறை லஞ்ச வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

3 Min Read
Chennai Bench

எம்.பி. நவாஸ் கனிக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார்: சிபிஐ ரகசிய அறிக்கை தாக்கல் – உயர் நீதிமன்றம் அதிரடி!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?