Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Monday, Jun 15, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

“போக்குவரத்துக்கு இடையூறான அலங்கார வளைவுகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும்” – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

Admin
Last updated: April 15, 2026 1:56 pm
Admin
Share
SHARE

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் அலங்கார வளைவுகளை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், வில்லாபுரம் மற்றும் விராட்டிபத்து ஆகிய பகுதிகளில் உள்ள அலங்கார வளைவுகள் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக உள்ளன. இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் சாலைகளில் புதிதாக அலங்கார வளைவுகள் அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

நீதிமன்ற விசாரணை

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக இருந்த அலங்கார வளைவு ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டது. கே.கே.நகர் பகுதியில் உள்ள அலங்கார வளைவு, தேர்தல் பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்தல் முடிந்த பிறகு, கே.கே.நகர் பகுதியில் உள்ள அலங்கார வளைவை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறாகக் கண்டறியப்பட்டுள்ள மற்ற அனைத்து அலங்கார வளைவுகளையும் 3 மாத காலத்திற்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

முக்கியத்துவம்: விழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்காக சாலைகளில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகள், வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிப்பதோடு விபத்துகளுக்கும் காரணமாகின்றன. இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மதுரை மாநகரின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலப் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Admin
1 Min Read

மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ அராஜகம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு – ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Admin
1 Min Read

You Might Also Like

Madurai Bench

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: “நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குத் தடையில்லை” – தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

2 Min Read
Madurai Bench

டாஸ்மாக் கடைகள் மூடல்: “குத்தகைத் தொகையைத் திரும்பத் தருவது பற்றி 2 வாரங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்”

2 Min Read
Madurai Bench

“திருநங்கைகளும் கடவுளின் பிள்ளைகளே!” – யூடியூபருக்கு முன்ஜாமீன்; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 Min Read
Madurai Bench

நியோமேக்ஸ் சொத்து விற்பனை: ஆன்லைன் பதிவு மந்தம் – விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் ஆணை!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?