Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Tuesday, May 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Free Legal Aid (TNSLSA)

லோக் அதாலத் : 1.03 லட்சம் வழக்குகளில் ரூ. 1034 கோடிக்கு தீர்வு

Admin
Last updated: March 14, 2026 4:02 pm
Admin
Share
SHARE

தமிழ்நாடு முழுவதும் நடத்த தேசிய லோக் அதாலத்தில், 1,03,366 வழக்குகளில், ரூ. 1,034.73 கோடிக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு மாதங்களுக்கு ஒரு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இன்று (மார்ச் 14) நடந்த லோக் அதாலத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐந்து அமர்வுகளும், மதுரை கிளையில் இரண்டு அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்டன. மாவட்டம், தாலுகா அளவில், 516 அமர்வுகள் அமைக்கப்பட்டு, நிலுவையில் இருந்த 90 ஆயிரத்து 921 வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 445 வழக்குகள் என, மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் ரூ. 7 கோடி அளவிற்கான இழப்பீட்டுத் தொகையையும், சமரசத் தீர்ப்பு நகல்களையும், காசோலைகளையும் சமரசம் செய்யப்பட்ட வழக்குகளைச் சேர்ந்த சில வழக்காடிகளிடம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வழங்கினார்.

இன்றைய லோக் அதாலத் மூலம் ஆயிரத்து 34 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 325 ரூபாய் வரை இழப்பீடுகள் வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TAGGED:compromiselok adalatmadrash high courtmadrashcmadurai benchmakkal neethimandramno appeal
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“மீடியா ட்ரையல் வேண்டாம்; சாட்சியங்களை வெளியிடாதீர்கள்!” – த்விஷா சர்மா வழக்கை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தது சிபிஐ; ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு!

Admin
4 Min Read

“கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் NTA-வுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

Admin
2 Min Read

மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்குப் பின்னடைவு? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Admin
3 Min Read

விளாத்திகுளம் பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

Admin
2 Min Read

You Might Also Like

Chennai BenchMadras HC Judgments

4 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்!

2 Min Read
Madras High CourtMadurai Bench

பொது நல வழக்கு தொடர்ந்த கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதை எதிர்த்து மனைவி வழக்கு

1 Min Read
Madras High CourtMadurai Bench

மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உத்தரவு

3 Min Read
Madurai Bench

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – காவல்துறை அலட்சியத்திற்கு நீதிமன்றம் கண்டனம்!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?