Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Wednesday, Apr 29, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
Madurai Bench

தேவேந்திர பண்பாட்டு கழக நில முறைகேடு புகார்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
Last updated: April 16, 2026 11:05 am
Admin
Share
SHARE

பொதுமக்களின் நன்கொடை நிதியில் வாங்கப்பட்ட நிலத்தைத் தனிநபர் பெயருக்கு மாற்றியதாகக் கூறி, நிலக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கயிலைராஜன் உள்ளிட்டோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

  • மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி. செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் 2006-ல் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 50-வது நினைவு ஆண்டையொட்டி மணிமண்டபம் கட்ட ‘DECORUM’ என்ற அமைப்பு மூலம் பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டது.
  • இந்த நிதியில் பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் வாங்கப்பட்ட நிலம், 2009-ல் தங்கராஜ் என்பவரால் அவரது மனைவி மற்றும் கூட்டாளிகளின் பெயருக்குத் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.
  • நிலம் வாங்கப்பட்ட போது கயிலைராஜன் அரசு மருத்துவராகவும், தங்கராஜ் வங்கிப் பணியிலும் இருந்துள்ளனர். அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறி, முறையான அனுமதியின்றிப் பொதுமக்களின் நிதியில் இவர்கள் சொத்து வாங்கியுள்ளனர். இந்த நிலம் ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.

மனுதாரரின் கோரிக்கைகள்

  • தனிநபர் பெயருக்கு மாற்றப்பட்ட நிலப் பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • நிலத்திற்கான பட்டா, சிட்டா உள்ளிட்ட வருவாய் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும்.
  • கயிலைராஜன், தங்கராஜ் மற்றும் நாகராஜ் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முடக்கப்பட்ட நிலத்தை மீட்டு, அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மணிமண்டபம் கட்ட ஒப்படைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை மனுதாரர் வைத்துள்ளார்.

நீதிமன்றத்தின் விசாரணை

இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை ஆய்வு செய்த நீதிபதி, இது குறித்துப் பத்திரப் பதிவுத்துறைத் தலைவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலைராஜன் உள்ளிட்டோர் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக நில முறைகேடு புகார் எழுந்து, நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

“வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு” – சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை!

Admin
2 Min Read

“குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது” – விஜய் மற்றும் TVK கட்சிக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் புகார்!

Admin
2 Min Read

“₹397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகார்” – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்!

Admin
2 Min Read

“அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு நிம்மதி” – அமலாக்கத் துறையின் பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

Admin
2 Min Read

You Might Also Like

Madurai Bench

“அமைதியான போராட்டத்திற்குத் தடை இல்லை!” – 65 பேர் மீதான வழக்கு ரத்து!

2 Min Read
Madras High CourtMadurai Bench

கொடிக்கம்பம், பிளக்ஸ் போர்டு, பேனர் வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.-க்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

1 Min Read
Madurai Bench

“விவசாய நிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது” – சிவகங்கை ஆட்சியர் முடிவெடுக்க மதுரை அமர்வு உத்தரவு!

2 Min Read
Madurai Bench

பஞ்சாயத்து செயலர் நியமனம் – ஆட்சியர் குழு மூலம் நிரப்ப இடைக்காலத் தடை – மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

2 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?