Legal Times
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
      • Chennai Bench
      • Madurai Bench
    • TN State Legal News
      • Government Orders (G.O)
      • TN Acts & Amendments
    • Namma Sattam
      • Consumer Protection
      • Family & Matrimonial
      • Free Legal Aid (TNSLSA)
      • Property & Real Estate
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
      • Madras HC Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Join WhatsApp
  • LegalAwareness
  • TamilNaduLaw
  • IndianLawTamil
  • TNLegalUpdates
  • Bar Council
  • Debates & Interviews
Sunday, Jul 26, 2026
Legal TimesLegal Times
Font ResizerAa
  • Home
  • Tamil Nadu Law
  • Courts & Judgments
  • Legal News
  • Careers & Law Students
Search
  • Home
  • Tamil Nadu Law
    • Madras High Court
    • TN State Legal News
    • Namma Sattam
  • Courts & Judgments
    • Supreme Court
    • High Court Judgments
    • District Court Updates
    • Weekly Legal Digest
  • Legal News
    • Breaking Legal News
    • Articles & Opinions
    • Explainers (Law Made Simple)
    • Landmark Cases
  • Careers & Law Students
    • Judicial Exams & Notifications
    • TN Law Colleges News
    • Junior Advocate Updates
    • Legal Jobs & Vacancies
    • Moot Courts & Competitions
Follow US
TN State Legal News

“நீதிபதிகளின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்த வேண்டும்!” – நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் கோரிக்கை!

Admin
Last updated: March 31, 2026 12:16 pm
Admin
Share
SHARE

2026-2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விவாதத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், நீதிபதிகளின் நிதி பாதுகாப்பு, நீதிமன்ற உள்கட்டமைப்பு மற்றும் ஒன்றிய அரசின் மானியக் குறைப்பு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

நீதித்துறைக்கான முக்கியக் கோரிக்கைகள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்த வேண்டும். (தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதிலும் ஓய்வு பெறுகின்றனர்). ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், அவர்கள் கடைசியாகப் பெற்ற முழு சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும். இது அவர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். ஓய்வுபெற்ற நீதிபதிகள் தீர்ப்பாயங்களில் (Tribunals) பணியமர்த்தப்படுவதைத் தடை செய்ய வேண்டும். அவர்களை அரசுப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தீர்ப்புகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

நீதிமன்ற உள்கட்டமைப்பு

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சியின் உச்சத்தில் இருக்கும்போது, இந்தியாவில் பல மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் கணினிகள் மற்றும் கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளுக்காகப் போராடி வருகின்றன. நீதித்துறைக்கு நிதி ஒதுக்குவது வெறும் செலவல்ல, அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். வணிக வழக்குகள் விரைவாகத் தீர்க்கப்பட்டால், தொழில்துறை முதலீடுகள் அதிகரிக்கும் என விளக்கமளித்தார்.

நீதிபதிகளின் சம்பள உயர்வு!

நீதிபதிகள் செய்யும் கடினமான பணிக்கு இப்போது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும், அவர்களுக்கு உரிய கௌரவமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் நிதியமைச்சரிடம் அவர் வலியுறுத்தினார்.

நீதிபதிகளின் ஓய்வு வயது ஏன் உயர்த்தப்பட வேண்டும்?

இந்தியாவில் ஒரு வழக்கை முடிக்கப் பல ஆண்டுகள் ஆகின்றன. அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் 62 அல்லது 65 வயதிலேயே ஓய்வு பெறும்போது, ஒரு பெரிய Knowledge Gap உருவாகிறது. ஓய்வு வயதை உயர்த்துவதன் மூலம் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளை விரைவாக முடிக்க முடியும் என்பதே பி.வில்சன் போன்றோரின் வாதமாகும்.
Share This Article
Facebook Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

304.9KLike
3MFollow
844.9MFollow
40.5MSubscribe
125Follow

Popular Posts

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்காலப் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Admin
1 Min Read

மனமகிழ் மன்றங்களில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ அராஜகம்: அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Admin
2 Min Read

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு குற்றவாளியின் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி வழக்கு – ஒத்திவைப்பு!

Admin
2 Min Read

சிவகங்கை ஆகாஷ் உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Admin
1 Min Read

You Might Also Like

TN State Legal News

தேர்தல் கூப்பன் சர்ச்சை: “அது போலி… மக்கள் ஏமாற வேண்டாம்” – தமிழகத் தேர்தல் ஆணையம் அதிரடி எச்சரிக்கை!

2 Min Read
Government Orders (G.O)

மத்திய ஆயுதக் காவல் படையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை: புதிய ‘CAPF மசோதா 2026’ அடுத்த வாரம் தாக்கல்!

2 Min Read
Breaking Legal NewsGovernment Orders (G.O)

டிஜிட்டல் பிரச்சாரத்திற்கு ‘செக்’ வைத்த தேர்தல் ஆணையம்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய கட்டுப்பாடுகள்!

2 Min Read
TN State Legal News

Supreme Court Sets Aside TN Governor’s Decision To Reserve 10 Bills For President’s Assent; Says He Acted Without Bona Fides

3 Min Read

About Us

Legal Times

Social Networks

Facebook-f Twitter Youtube Instagram

C47, 2nd Street, Anna Nagar S.O, Anna Nagar, Chennai, Tamil Nadu – 600040

Advertise With Us
Contact Us
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?